முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக-வின் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார். அவருக்கு வயது 53. 

Written by - ZEE Bureau | Last Updated : May 29, 2021, 09:29 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி காலமானார்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக-வின் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார். அவருக்கு வயது 53. அவர் புற்றுநோய்க்கு சிகிச்சைப்பெற்று வந்த  நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 7:05 மணியளவில் காலமானார்.

ஆ.ராசாவின் மனைவி கடந்த ஆறு மாதங்களாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில்,அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக இன்று மருத்துவமனை தெரிவித்திருந்தது. இன்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

முன்னதாக, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக புற்றுநோய்க்கு எதிராக போராடிய பரமேஸ்வரிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களும், பிற மருத்துவர்களும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் கேட்டறிந்ததாக ரேலா மருத்துவமனை நிர்வாகம் முன்னர் தெரிவித்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News