அபிநந்தன் விரைவில் நாடு திரும்புவார்? பாகிஸ்தான் உறுதி அளித்ததாக தகவல்

விரைவில் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமெரிக்கா தூதரகத்திடம் கூறியதாக தகவல்கள் வந்துள்ளது

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Feb 28, 2019, 02:23 PM IST
அபிநந்தன் விரைவில் நாடு திரும்புவார்? பாகிஸ்தான் உறுதி அளித்ததாக தகவல்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் CRPF வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இதையடுத்து, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நேரம், இடத்தை இந்திய ராணுவமே முடிவு செய்து கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார். 

இந்த நிலையில் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரும் வகையில், இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது.

அடுத்த நாள் பாகிஸ்தான் விமானம் எப்16 இந்தியாவை தாக்க ஆறு மிக் 21 ரக விமானங்கள் அனுப்பபட்டிருக்கின்றன‌. அதை கண்டதும் பாகிஸ்தான் விமானங்கள் திரும்பியிருக்கின்றன. ஆனால் அவர்களை பின்தொடர்ந்த இந்திய விமானங்கள் துரத்தி அடித்திருக்கின்றன‌. அப்பொழுது எல்லையினை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தியது. பின்னர் இந்திய விமானம் திரும்பும்பொழுதுதான் பாகிஸ்தான் தாக்கி உள்ளது. அந்த விமானத்தில் இருந்த அபிநந்தனின் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மற்ற ஐந்து மிக் விமானங்கள் பத்திரமாக நாடு திரும்பியது. 

ஜெனிவா போர்முறை ஒப்பந்தங்களின்படி கைது செய்யப்படும் போர் கைதிகளை திருப்ப சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது விதி. அபிநந்தனை விடுவிக்கக் கோரி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றது. இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. 

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைப்படி பிடிபட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும். எனவே பாகிஸ்தான் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வயதுக்கு கட்டுப்பட்டு அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் விரைவில் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமெரிக்கா தூதரகத்திடம் கூறியதாக தகவல்கள் வந்துள்ளது.