'ADMK ஏழைகளின் கட்சி; DMK கோடீஸ்வர கட்சி' - ஜெயக்குமார்..!

மேயர் பதவிக்கான விருப்ப மனு கட்டணத்தை திமுக ரூ.50 ஆயிரமாக நிர்ணயித்தது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!!

Last Updated : Nov 15, 2019, 11:45 AM IST
'ADMK ஏழைகளின் கட்சி; DMK கோடீஸ்வர கட்சி' - ஜெயக்குமார்..! title=

மேயர் பதவிக்கான விருப்ப மனு கட்டணத்தை திமுக ரூ.50 ஆயிரமாக நிர்ணயித்தது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!!

மாவட்ட தலைமை அதிமுக அலுவலகங்களில் இன்று விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து நாளை மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மாநகராட்சி மேயர் பதவிக்கு 25,000 ரூபாயும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,000 ரூபாய் விருப்ப மனு கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நேற்றே திமுக உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கியது. திமுகவவின் விருப்பமனுவில் மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர்  50 ஆயிரம் ரூபாய் விருப்ப மனு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக விருப்ப மனுவில் மேயர் பதவிக்கு 25 ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்; திமுக பணக்கார கட்சி ஏழைகளின் கட்சி அல்ல அதனாலதான் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு 50,000 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயித்து உள்ளனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் கடந்த ஆண்டு சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்பேன் என்ன சொல்லியுள்ளார் ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்து வந்துள்ளது எனவே எங்களின் சேவையை மக்கள் உணர்ந்து அதிமுகவிற்கு வாக்குகளை அளிப்பார்கள்.

மேலும், நீச்சல் தெரிந்தவனுக்கு ஆழம் பற்றி கவலை இல்லை அதுதான் அண்ணா திமுக ஆனால் நீந்த தெரியாத கட்சி திமுக ஆணையரை மாற்றியுள்ளதாக ஒரு இளைஞர் கூறுகிறார் என்றால் அதை உடனே கேட்டுக்கொண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிடுகிறார் அதில் இருந்தே தெரிகிறது அவருடைய அறிவு பற்றி என ஸ்டாலின் அவர்களை கடுமையாக சாடி பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் தகவலை அப்படியே பேசாமல் அது குறித்து ஆராய்ந்து கூற வேண்டுமா ,ஆனால் யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசித்துவிட்டு அறிக்கையில் கையெழுத்திட்டு செல்கிறார். 

மே மாதம் வந்த கடிதம் குறித்து செப்டம்பர் மாதத் திலேயே முதல்வர் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார் அதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஆனால் இது எதுவும் தெரியாமல் நல்லாட்சியை குற்றம் சொல்ல வேண்டும் என ஸ்டாலின் பேசி வருகிறார். எனவே இதுவும் மக்கள் மத்தியில் எடுபடாது அவர் சிந்தனையை மு க ஸ்டாலின் மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும் நடிகர் ரஜினியின் அரசியல் தலைமை வெற்றிடம் குறித்த கருத்திற்கு பேசியுள்ள அவர், வெற்றிடம் இருப்பது உண்மை என்றால் நோட்டா தான் அதிக வாக்குகள் பெற்று இருக்கும் எனவே மக்கள் தங்களுக்கு விருப்பமான கட்சியை எது என வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி உள்ளனர் அதற்கு எடுத்துக்காட்டு தான் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி என அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News