பிஜேபி குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது! முன்னாள் அமைச்சர் கட்டளை!

பிஜேபி கட்சி குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது என முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Sep 20, 2023, 09:37 AM IST
  • பாஜக - அதிமுக இடையே நடக்கும் மோதல்.
  • கூட்டணி முறிந்தது என்று முன்னாள் அமைச்சர் தகவல்.
  • இரு தரப்பினர் இடையே சில மாவட்டங்களில் மோதல்.
பிஜேபி குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது! முன்னாள் அமைச்சர் கட்டளை! title=

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற நடை பயணத்தின் போது அண்ணாவை குறித்து விமர்சனம் செய்தார்.  இதற்கு அதிமுக முன்னாள் முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் பிஜேபி தலைவர் அண்ணாமலை குறித்த விமர்சனம் செய்து சுவரொட்டிகள் ஒட்டினர். இதனால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அதிமுக பூத்துக் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.  

மேலும் படிக்க | TTF வாசனை கைது செய்த காவல்துறை! பிணையிலும் வர முடியாது!

இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது பிஜேபி மற்றும் கூட்டணி கட்சிகள் குறித்து யாரும் பேசக்கூடாது மற்றும் தலைமை முடிவெடுக்கும் வரை யாரும் பிஜேபி உள்ளிட்ட  கூட்டணி கட்சிகள் குறித்து யாரும் பேசயோ விமர்சனம் செய்து சுருட்டி கிலோ ஒட்டக்கூடாது என்று அவர் தலைமையில் இருந்து உத்தரவு வந்தால் ஓட ஓட விரட்டும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என அவர் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் என் சின்னதுரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில்  பிஜேபி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் பிஜேபினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி,  அதிமுகவுக்கு எதிராக கண்டனம் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.  பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்ததை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பிஜேபி இல்லை என தெரிவித்தார்.  இதை தொடர்ந்து தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி வீதியில் பிஜேபி கட்சியினர் அதிமுக கூட்டணியில்  பிஜேபி இல்லை என அறிவித்ததை வரவேற்கும் வகையில் பிஜேபி கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, பொதுச் செயலாளர் வன்னியராஜ், ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்தும் அதிமுக எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன, கட்சியின் தலைவராக இருப்பவர்களுக்கு பொருமை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வேண்டும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். "தமிழகத்தில் முதல்வராக பதவி வகித்தவர்கள் பல்வேறு வரலாற்று பின்னணி கொண்டவர்கள், ஒவ்வொரு முதல்வர்களுக்கும் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களின் அடிப்படையில் வரலாறு உள்ளது, முதல்வர் மு.க.ஸ்டாலின் I.N.D.I.A கூட்டணியில் பெற முடியாத கவுரவம், செல்வாக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் கிடைத்துள்ளது, 

எடப்பாடி பழனிச்சாமி நிதானத்துடன் மிகவும் பொறுமையாக செயலாற்றி வருகிறார், எடப்பாடி பழனிச்சாமி மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என தெளிவாக கூறியுள்ளார், நீட் தேர்வு ரகசியத்தை மதுரை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுவாரா?, எடப்பாடி பழனிச்சாமிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன, தேவையில்லாத வரலாற்றை வரலாறு தெரியாதவர் பேசி வருகிறார், தலைவராக இருப்பவர்கள் பொருமை, கடமை ,கண்ணியம், கட்டுப்பாடு வேண்டும்" என கூறினார்.

மேலும் படிக்க | 'மார்க் ஆண்டனி' வசூல் விவரம்: வெளியான நான்கே நாட்களில் 50 கோடி கலெக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News