மதுரையில் அதிமுக மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு மகளிருக்கான கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில் "போருக்கு தயாராக உள்ளது போல அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளது. மன்னர் படை வீரர்களை தயார் செய்வது போல அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிச்சாமி தயார் செய்துள்ளார். தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் களப்பணி செய்ய அதிமுக தயாராக உள்ளது.
மேலும் படிக்க | கன்னியாகுமரி எம்.பி. சீட் யாருக்கு? விஜயதரணி பாஜகவில் இணைந்ததால் களேபரம்!
தேசிய அளவில் செயல்படும் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாநாட்டை தீவிரவாதிகள் மாநாடு என அண்ணாமலை வாய்கொழுப்புடன் பேசி உள்ளார். அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவைப்படுகிறது. அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுகளால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொம்மை போல காட்சி அளிக்கிறார்கள் அல்லவா, அதுபோல அல்லாமல் வெற்றி பெறும் அதிமுக உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? எடப்பாடியா? என்கிற நிலைப்பாடு எங்களிடம் இல்லை" என பேசினார்.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, " தேர்தலில் கூட இருக்கும் வரை தான் நண்பர்கள் வெளியே போய் விட்டால் அவர்கள் எங்களுக்கு எதிரியே. தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு பாதிப்புகள் வரும் என எண்ணியே சட்டமன்றத்தில் துணை தலைவர் இருக்கை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் இருக்கை மாற்றி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தேவையற்ற அரசியல் சாயம் பூசப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைவர் போல பேசுவதில்லை மேடைப் பேச்சாளர் போல பேசி வருகிறார்.
அதிமுகவில் எம்எல்ஏவாக பதவி வகித்தது பக்கத்து வீட்டுகாரருக்கே தெரியாதவர்களை எல்லாம் பாஜகவில் சேர்த்துக் கொண்டுள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் உதிர்ந்த இலை. தலைமுடி போல தான், உதிர்ந்ததை பற்றி நாங்கள் என்றுமே கவலைப்பட்டதில்லை. அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார். கூட்டணி குறித்த முடிவு எடுக்க முழு அதிகாரமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். திமுகவுடன் கூட்டணியில் இருக்கிற கட்சிகளே அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என கூறினார்.
மேலும் படிக்க | போதைப்பொருள் விவகாரம்: ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து டிஸ்மிஸ் - துரைமுருகன் அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ