ஆள் கடத்தலில் கைதான அதிமுக பிரமுகர் - நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அனுமதி!

ஆள் கடத்தல் புகாரில் கைதான அதிமுக பிரமுகர் அன்பழகனுக்கு நெஞ்சுவலி காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 18, 2021, 05:17 PM IST
ஆள் கடத்தலில் கைதான அதிமுக பிரமுகர் - நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அனுமதி!

தர்மபுரி அதிமுக விவசாய அணியின் மாநில தலைவராகவும், தர்மபுரி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராக இருந்து வரும், தாளப்பள்ளம் பகுதியை சேர்ந்த டி.ஆர்.அன்பழகன் அவருக்கு சொந்தமான கல்குவாரியில் பணிபுரிந்த ஜல்மாரம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், முத்துவேல் ஆகிய இரு இளைஞர்களையும் கடத்தி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. அன்பழகனுக்கு உதவியதாக மகேந்திரன், முருகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ALSO READ என்ன ஆச்சு சென்னைக்கு? எல்லாருக்கும் காய்ச்சலா?!

மேலும் ஆள் கடத்தல் வழக்கில் அன்பழகன் நேற்று பென்னாகரம் போலீசார் கைது செய்தனர், தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு விட்டதாக டி ஆர் அன்பழகன் கூறவே, முதலில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சையிலிருந்த மருத்துவமனைக்கே நேரில் வந்திருந்த பென்னாகரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் டி ஆர் அன்பழகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 

aiadmk

இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளார். இங்கு காவல்துறை பாதுகாப்புடன் பரிசோதனைகள் நடத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே கைதுக்கு பயந்து டி.ஆர்.அன்பழகன் நெஞ்சுவலி என நாடகம் நடித்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது.

ALSO READ என்ஜினீயரை கொள்ளையனாக மாற்றிய கொரோனா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News