ஜம்மு காஷ்மீர் நடவடிக்கை போல கச்சத்தீவையும் மீட்டுத் தர வேண்டும்: ஓபிஆர்

இன்றைக்கு ஜம்மு-காஷ்மீர் பெண்களுக்கு சம உரிமையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அவர்கள் இனிமேல் கண்டிப்பாக சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் என அதிமுகவின் எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 6, 2019, 06:02 PM IST
ஜம்மு காஷ்மீர் நடவடிக்கை போல கச்சத்தீவையும் மீட்டுத் தர வேண்டும்: ஓபிஆர் title=

புதுதில்லி: இன்றைக்கு ஜம்மு-காஷ்மீர் பெண்களுக்கு சம உரிமையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அவர்கள் இனிமேல் கண்டிப்பாக சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் என அதிமுகவின் எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதா மீதான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கவே மாநிலங்களவையில் இந்த மசோதவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இன்று இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுகவின் ஒரே ஒரு எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத் பேசினார். அப்பொழுது அவர் கூறியது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றியும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1984 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசிய புரட்சி தலைவி அம்மா அவர்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை எப்பொழுது இந்தியாவுடன் இணைக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு விடையாக, இன்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் செயல் அமைந்துள்ளது. அதற்கு அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சூழலில், இன்றைக்கு ஜம்மு-காஷ்மீர் பெண்களுக்கு சம உரிமையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். மக்களுக்காக சுதந்திரக் கதவை திறந்து வைத்துள்ளனர். அவர்கள் இனிமேல் கண்டிப்பாக சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் என நம்புகிறேன்.

சிலர் அரசியல் ஆதாயத்திற்காக 1974 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கச்சதீவை தமிழகத்தில் இருந்து பிரித்து இலங்கையிடம் கொடுத்தது. ஜம்மு காஷ்மீர் நடவடிக்கை போல, கச்சத்தீவையும் மீட்டுத் தர வேண்டும் என்று தமிழகத்தின் சார்பாக அமைச்சரிடமும், பிரதமரிடமும் கோரிக்கை வைக்கிறேன் என எம்.பி. ரவீந்திரநாத் குமார் பேசினார். 

Trending News