திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதியது. இதில் 130 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Trichy- Dubai Air India flight with 136 passengers on board hit the ATC compound wall at Trichy Airport yesterday and was diverted to Mumbai. The flight had got damaged under the belly, was declared fit for operations after inspection at Mumbai Airport. pic.twitter.com/8cczII46Mp
— ANI (@ANI) October 12, 2018
திருச்சியில் இருந்து 130 பயணிகளுடன் இன்று அதிகாலை 1.20 மணியளவில் புறப்பட்ட விமானம், குறைவான உயரத்தில் பறந்ததால் விமானத்தின் சக்கரங்கள் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் அதனருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்தில் உரசியது.
இந்நிலையில் பெரும் சப்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பாதுகாப்பு படை வீரர்கள், சம்பவம் குறித்து விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் திருச்சி விமானநிலையத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவித்தார். அத்துடன் விமானத்தில் பயணம் செய்த 130 பயணிகளும் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.