தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சம்: இன்று 33,658 பேர் பாதிப்பு, 303 பேர் பலி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரில், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போரிடுவதற்கான போர் அறைகள் அமைக்கப்படும் என்று இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Written by - ZEE Bureau | Last Updated : May 15, 2021, 09:39 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 33,658 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
  • தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,65,035 ஐ எட்டியுள்ளது.
  • இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 303 பேர் தமிழகத்தில் இறந்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சம்: இன்று 33,658 பேர் பாதிப்பு, 303 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது. சனிக்கிழமை தமிழ்நாட்டில் 33,658 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கையாகும். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,65,035 ஐ எட்டியுள்ளது, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,07,789 ஆக உள்ளது என மாநில சுகாதார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 303 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,359 ஆக உயர்த்தியுள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இன்று 20,905 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். 

முன்னதாக, வெள்ளிக்கிழமையன்று மாநிலத்தில் 31,892 பேர் புதிதாக COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 288 பேர் இறந்தனர்.

4 மாவட்டங்களில் கோவிட் போர் அறைகள் (COVID War Rooms)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் (MK Stalin) வழிகாட்டுதலின் பேரில், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போரிடுவதற்கான போர் அறைகள் அமைக்கப்படும் என்று இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பல்வேறு அரசு மருத்துவமனைகள் மற்றும் கோவிட் மையங்களுக்குச் சென்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

ALSO READ: ஆல்பாஸ் கிடையாது; மாணவர்களின் எதிர்காலமே எங்களுக்கு முக்கியம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட ₹ 45 கோடி செலவில் சுமார் 15 லட்சம் குப்பிகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் சித்த வைத்தியம் அளிக்கப்படும் இடங்களில் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். கோயம்புத்தூருக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவிட் -19 சிகிச்சையைத் தொடங்கிய தனியார் மருத்துவமனைகளை அரசாங்கம் கூர்ந்து கவனிக்கும் என்று அவர் மேலும் கூறினார். 

இதற்கிடையில் இந்தியாவின் ஒட்டுமொத்த நேர்மறை விகிதம் இப்போது 19.8 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால், "கடந்த வாரம் 21.9 சதவீதமாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த நேர்மறை விகிதம் இப்போது 19.8 சதவீதமாக குறைந்துள்ளது" என்று கூறினார்.

11 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் மேலானோர் சிகிச்சையில் இருப்பதாகவும் 17 மாநிலங்களில் 50,000 க்கும் குறைவானோர் சிகிச்சையில் இருப்பதாகவும் அகர்வால் கூறினார்.

"மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் உயர்வைக் கண்டிருக்கும் தமிழகத்தின் (Tamil Nadu) நிலை சற்று கவலையை அளிக்கிறது" என்று அகர்வால் மேலும் கூறினார்.

ALSO READ: நாளை ஞாயிறு முழு ஊரடங்கு: ரேஷன் கடைகளில் ரூ.2000 நிவாரண நிதி கிடைக்குமா? கிடைக்காதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News