பானிபூரி பிரியர்கள் கவனத்திற்கு! புற்றுநோய் ஏற்படும் ரசாயனங்கள் உள்ளது!

கோவையில் பானிபூரி கடைகள் மற்றும் பானி பூரி தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Written by - RK Spark | Last Updated : Jul 5, 2024, 11:05 AM IST
  • பானி பூரி கடைகளில் அதிரடி சோதனை.
  • சுகாதாரமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
பானிபூரி பிரியர்கள் கவனத்திற்கு! புற்றுநோய் ஏற்படும் ரசாயனங்கள் உள்ளது! title=

தமிழகத்தில் துரித உணவு வகைகளில், பிரபல உணவாக பானி பூரி இருந்து வருகிறது. இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பானி பூரி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதில் நடத்தப்பட்ட சோதனையின் போது அதில் புற்றுநோய் கலக்கும் நிறமி கலந்து இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக தமிழகத்திலும் பல்வேறு பானி பூரி கடைகளில் நிறமிகள் கலக்கப்பட்டுள்ளதா? என அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவானது அதிரடி சோதனையில் இறங்கியது.

மேலும் படிக்க | திருவொற்றியூர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வைரல்! கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள பாஸ்ட் புட் ஸ்டால்களில் நடக்கும் தரமற்ற உணவு விநியோகம் மற்றும் தயாரிப்பை தடுக்க அதிரடியாக சோதனையில் ஈடுபட்ட இந்த குழுவினர், பாணி பூரி விற்கும் இடங்கள் மட்டுமல்லாமல் தயாரிக்கும் இடங்களுக்கும் நேரடியாக சென்று தயாரிப்பு கூடங்குளின் தரம் தயாரிப்பு முறை பொருட்கள் கையாளுதல் உள்ளிட்டவை குறித்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ஒரு தயாரிப்பு நிலையத்தில் பானி பூரி தரையில் கொட்டிக் கிடந்த நிலையில் அதனை பார்த்து இதுபோன்று எங்கும் பார்த்ததில்லை என கடிந்து கொண்ட அதிகாரி தமிழ்ச்செல்வன் உடனடியாக அனைத்தையும் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி உடனடியாக அழித்தார். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் பானி பூரிக்கு தடை?

கோபி மஞ்சூரியன் போன்ற உணவுகளில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்துவதை தடுத்துள்ள கர்நாடக மாநில உணவு பாதுகாப்பு துறை கடந்த சில தினங்களுக்கு முன்னாள் பானி பூரி விற்பனையாளர்களிடம் சோதனை நடத்தியது. பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 79 இடங்களில் இருந்து பானி பூரி மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவில் பானி பூரியில் கலக்கப்படும் மிளகாய் பொடியில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், பானி பூரி தயாரிக்கும் போது சாஸ் மற்றும் மீத்தா தூள் ஆகியவற்றில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்குமாறு மாநில அரசுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் படிக்க | கோயம்புத்தூர் மக்களே கொண்டாட்டத்திற்கு தயராகுங்கள்.. இதோ கோவை விழா 2024

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News