அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி விற்பனை

சென்னை மாநகராட்சியின் 403 அம்மா உணவகங்களிலும் இரவு உணவு வேளையில் சப்பாத்தி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2021, 08:51 AM IST
அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி விற்பனை title=

சென்னை: கடந்த 2013-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகம் திட்டத்தை தொடங்கி மூன்று வேளையும் குறைந்த விலையில் உணவு வழங்கி வந்தார். அம்மா உணவகத்தில் (Amma Canteen) காலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, மூன்று ரூபாய்க்கு பொங்கல், மதியம் ஐந்து ரூபாய்க்கு கலவை சாதங்கள் மற்றும் இரவில் 3 ரூபாய்க்கு சப்பாத்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் எந்திரக்கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஒரு சில அம்மா உணவகங்களில் (Amma Unavagam) மட்டும் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் மட்டுமே வழங்கப்பட்டது.

ALSO READ | மதிமுக கட்சியிலும் வாரிசு அரசியல்! வைகோ மகனுக்கு முக்கிய பொறுப்பு

இதனால் இரவு நேரத்தில் சப்பாத்தி வழங்கப்படாததால் திமுக ஆட்சியில் அம்மா உணவகம் இருட்டடிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி., 

சென்னை மாநகராட்சியின் 403 அம்மா உணவகங்களிலும் இரவு உணவு வேளையில் சப்பாத்தி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி மற்றும் கோதுமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாகவும், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, எண்ணெய் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் கூட்டுறவு பண்டக சாலையில் இருந்து பெறப்பட்டு வருகிறது.

இவ்வாறு பெறப்படும் பொருட்களில் கோதுமை தனியார் ஆலைகளில் மாவாக அரைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் எந்திரக்கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஒரு சில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும் சப்பாத்தி இரவு வேளைகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

இதுதவிர சென்னையில் உள்ள சில அம்மா உணவகங்களில் பணியில் உள்ள எந்த ஒரு சுய உதவிக்குழு உறுப்பினரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ALSO READ | Tamil Nadu: 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடலட்டை கடத்தல் தடுப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News