தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு நான்கு மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 2, 2020, 06:51 AM IST
  • தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது.
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இலவச உணவு.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 1,264 ஐ எட்டியுள்ளது.
  • கோவிட் -19 சோதனைக்கு தமிழகத்தில் மேலும் ஒரு ஆய்வகம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு

சென்னை: தமிழகத்தில் (Tamil Nadu Lockdown) ஊரடங்கு மீண்டும் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு நான்கு மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகம் (Amma Unavagam) மூலம் ஜூலை 5 வரை குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு இலவசமாக உணவு பரிமாறுப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi Palanisamy) அறிவித்துள்ளார்.

அதேபோல தமிழ்நாடு புதன்கிழமை 3,882 பேருக்கு கோவிட் -19 தொற்று (COVID-19 Pandemic) ஏற்பட்டதால், மாநிலத்தின் மொத்த எண்ணிக்கையை 94,049 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 1,264 ஐ எட்டியுள்ளது. சென்னை நேற்று 2,182 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை, தலைநகரில் 60,533 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

பிற செய்தி | NLC விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

நேற்று பாதிக்கப்பட்டவர்களில் மாநிலத்திற்கு திரும்பி வந்தவர்களில் 74 பேர் அடங்குவர். 12 வயதிற்கு உட்பட்ட 4,617 குழந்தைகளுக்கு COVID-19 பாசிடிவ் சோதனை செய்துள்ளனர்.

தமிழ்நாடு சுகாதார மற்றும் நலத்துறை (Health minister of Tamil Nadu) வெளியிட்டுள்ள ஊடக புல்லட்டின் படி, மாநிலத்தில் செயலில் 39,856 பேர் எனவும், மொத்தம் மீட்டெடுப்புகளின் எண்ணிக்கையை 52,926 ஆக உள்ளது. அதில் 2,852 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

கடந்த 24 மணி நேரத்தில் 31,521 மாதிரி சோதனைகள் (COVID-19 testing) உட்பட இதுவரை 12,02,204 மாதிரி சோதனைகளை தமிழகம் நடத்தியுள்ளது. மதுரை (297), செங்கல்பட்டு (226), சேலம் (162), திருவள்ளூர் (147), ராமநாதபுரம் (100) ஆகியவை அதிகபட்சமாக கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன.

பிற செய்தி | ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாது

மொத்தம் 2,87,725 பயணிகள் தமிழ்நாட்டிற்கு பல்வேறு போக்குவரத்து பயணம் மூலம் நுழைந்துள்ளனர். அவர்களில் 3,547 பேருக்கு நேர்மறையாக சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

கோவிட் -19 சோதனைக்கு தமிழகத்தில் மேலும் ஒரு ஆய்வகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை திருச்செங்கோடு புதன்கிழமை சோதனைக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், மாநிலத்தில் COVID-19 சோதனைக்கான ஆய்வகங்களின் எண்ணிக்கை 91 ஆக உள்ளது. 48 அரசு ஆய்வகங்கள் மற்றும் 43 தனியார் ஆய்வகங்கள் வரை உயர்ந்துள்ளது.

பிற செய்தி | கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 31 வரை தமிழ்நாட்டில் லாக்டவுன் நீட்டிப்பு

More Stories

Trending News