சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அறிவியல் நகரத்தின் துணை தலைவர் மலர்விழி ஐஏஎஸ் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. (Ex IAS ) தர்மபுரி மாவட்ட முன்னாள் மாவட்ட ஆட்சியர் விருகம்பாக்கம் வீட்டிலும் மற்றும் அவருக்கு தொடர்புடைய தனியார் நிறுவனங்களிலும் சுமார் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. மேலும் முறைகேடாக 1,31,77,500 ரூபாய் கையாடல் சொத்து குவிப்பு தொடர்பாக நேற்று முதல் ரெய்டு நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்ட முன்னாள் மாவட்ட ஆட்சியரும், தற்போதைய சென்னை அறிவியல் நகரின் துணை தலைவராக பணிபுரிந்து வரும் S.மலர்விழி, இ.ஆ.பா அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியராக 28.02.2018 -ந்தேதி முதல் 29.10.2020 ந்தேதி வரை பணிபுரிந்து வந்தார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் ஐந்தாவது மாநில நிதி குழு மானிய நிதியிலிருந்து 20.11.2019ந்தேதி மற்றும் 28.04.2020-ந்தேதி சொத்துவரி வசூல் இரசீது புத்தங்கள், குடிநீர் கட்டணம் வசூல் இரசீது புத்தங்கள். தொழில்வரி வசூல் இரசீது புத்தங்கள் மற்றும் இதர கட்டண புத்தங்கள் மொத்தம் 1,25,500 எண்ணிக்கையில் 2 தனியார் நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்து கிராம ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்துள்ளார் எனவும் இந்த புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படாமல் நேரடியாக 2 தனியார் நிறுவனங்களிலிருந்து மேற்படி வரிவசூல் புத்தங்களை அதிகபட்ச விலைக்கு கொள்முதல் செய்ததில் தொடர்பாக .S.மலர்விழி,( இ.ஆ.பா) அவர்கள் 2 தனியார் நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து ரூ.1,31,77,500/- கையாடல் செய்தது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் 05.06.2023-ந் தேதியன்று
1) S.மலர்விழி, இ.ஆ.ப 2) H.தாகீர்உசேன், கிரசண்ட் நிறுவன உரிமையாளர்,3) திரு.வீரய்யா பழனிவேல், நாகா டிரேடர்ஸ் உரிமையாளர் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு தற்போது செய்யப்பட்டது. இது தொடர்பாக, சென்னையில் விருகம்பாக்கம் சாலையில் உள்ள S.மலர்விழி, இ.ஆ.ப அவர்களின் வீடுகள் மற்றும் மேலும் தொடர்புடைய இடங்களிலும் உள்ளிட்ட சுமார் 10 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் சென்னையில் ஐந்து இடங்களிலும், விழுப்புரம் மற்றும் தருமபுரியில் தலா ஒரு இடங்களிலும் மற்றும் புதுக்கோட்டையில் மூன்று இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது என வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் வெளியீட்டு உள்ளனர்.
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது ஐஏஎஸ் அதிகாரி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இப்படி அடுக்கடுக்காக சோதனை நடைபெறுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | உதயநிதி கூலிங் கிளாஸ் போட்டு ஒடிசாவுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார் - ஜெயக்குமார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ