ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை: சென்னை ஐகோர்ட்!

தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Last Updated : Oct 16, 2018, 04:11 PM IST
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை: சென்னை ஐகோர்ட்! title=

தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய உரிமை இல்லை என சென்னையை சேர்ந்த சேக் தாவூத் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் விதிகளை முறையாக பின்பற்றாமல், ஆன்லைனில் பட்டாசு விற்கப்படுகிறது. ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் அதிகளவில் சீனப்பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டு விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்  ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளதுடன், இது குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, சென்னை போலீஸ் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Trending News