பீஸ்ட் படத்தின் ரசிகர் ஷோ கேன்சல் - விஜய் ரசிகர்கள் சாலை மறியல்

பீஸ்ட் படத்தின் ரசிகர் காட்சி ரத்து செய்யப்பட்டதால் விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

Last Updated : Apr 7, 2022, 12:52 PM IST
  • பீஸ்ட் படத்தின் ரசிகர் காட்சி ரத்து
  • விஜய் ரசிகர்கள் சாலை மறியல்
  • விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்
 பீஸ்ட் படத்தின் ரசிகர் ஷோ கேன்சல் - விஜய் ரசிகர்கள் சாலை மறியல் title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் விஜய் ஃப்ரெஷ்ஷாகவும், நெல்சனின் மேக்கிங் ரிச்சாகவும் இருக்கிறதென புகழ்ந்தனர்.  

மேலும் படிக்க | ’அரசியல் தலைவர்களை விமர்சிக்கக்கூடாது’ - விஜய் அறிக்கையின் பின்னணி

இன்னும் ஒருவாரத்தில் பீஸ்ட்  படம் வெளியாக இருப்பதால் விஜய்யின் ரசிகர்களின் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். படத்தின் டிக்கெட்டுக்கான முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பல இடங்களில் தற்போதே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

Vijay Fans Protest

இந்நிலையில், கடலூர் நியூ சினிமா திரையரங்கில் பீஸ்ட் படத்துக்கு ரசிகர் காட்சி வழங்கப்படாததை கண்டித்து விஜய் ரசிகர்கள் கடலூர்-புதுவை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்...சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இதன் காரணமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர்  விஜய் ரசிகர்களை விரட்டினர். மேலும்,  விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News