20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது!

Matrimonial Fraudster Arrested: மேட்ரிமோனியில்  இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் பணம் பறித்த பட்டதாரி வாலிபர் கைது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 29, 2024, 04:01 PM IST
  • ஆசை காட்டி மோசடி
  • அமெரிக்க மாப்பிள்ளையின் கைவரிசை
  • பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இளைஞர் கைது
20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது! title=

மேட்ரிமோனியில்  இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் பணம் பறித்த பட்டதாரி வாலிபர் கைது. சென்னை கொளத்தூர் பகுதியில்  கணவனை இழந்த இளம் பெண் ஒருவர் தனது  மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். 

அதில் சில மாதங்களுக்கு முன்பாக மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் கார்த்திக் என்ற நபர் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவர் தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாகவும்  தற்போது தான் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருவதாகவும்  தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக குறிப்பிட்டுள்ளார்..

குறிப்பாக என்னுடைய பத்து வயது மகனை, தனது மகன் போல் பார்த்துக் கொள்வதாகவும் திருமணம் செய்து கொண்டு இருவரையும் அமெரிக்கா அழைத்துச் செல்வதாக கூறியதை நம்பி அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல விசா எடுக்க வேண்டி ரூபாய் 5 லட்சம் பணம் அனுப்புமாறு கேட்டதன் பெயரில், கார்த்திக் கூறிய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியதாக தெரிவித்துள்ளார் ..

இந்நிலையில் சில தினங்கள் கழித்து மீண்டும் வேறு காரணத்திற்காக பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்து, அவரை பற்றி விசாரித்த போது  அவர் ஒரு‌ மோசடி பேர்வழி என்பது தெரியவந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது புகாரின் பேரில் மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் இளம்பெண் பணம் அனுப்பிய வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் அந்த வங்கிக் கணக்கு விருகம்பாக்கத்தில் வசிக்கும் மற்றொரு பெண்ணுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. 

மேலும் படிக்க | பாணி பூரியில பானியே இல்லை! பரணியின் ஆசையை நிறைவேற்ற சண்முகம் என்ன செய்வான்?

இதனையடுத்து போலீசார் அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் , அது தன்னுடைய காதலர் பிரசாந்த் என்பதும் அமெரிக்காவின் டிஃபன்ஸ் துறையில் டேட்டா அனலைஸ்டாக பணிபுரிந்து வருவதாகவும், சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் ஒரு நபர் தனக்கு பணம் தர வேண்டும் என்றும்  தன்னிடம் இந்திய வங்கி கணக்கு இல்லை என்பதால் தன்னிடமிருந்து வங்கிக் கணக்கை வாங்கி கொடுத்ததாகவும் பின்னர் அதில் ரூபாய் 5 லட்சம் பணம் வந்ததாக தெரிவித்துள்ளார்..

பின்னர் அந்த  5 லட்சத்தில் மூன்று லட்ச ரூபாயை வளசரவாக்கத்தில் உள்ள மற்றொரு நபருக்கு அனுப்ப வேண்டும் என தனது காதலர் கூறியதன் பேரில் மூன்று லட்ச ரூபாய் பணம் அனுப்பியதாக கூறியுள்ளார்.

பின்னர் போலீஸார் 3 லட்ச ரூபாய் செலுத்திய வங்கி கணக்கை ஆய்வு செய்த போது அது வளசரவாக்கத்தை சேர்ந்த  மற்றொரு இளம்பெண்ணுக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடிப்பது.‌

பின்னர் அந்த இளம்பெண்ணிடம்  விசாரணை மேற்கொண்ட போது தனது காதலன் பிரசாந்த் ஆனந்த் அமெரிக்காவில் பணிபுரிந்து வருவதாகவும் மேட்ரிமோனியில் இணையதள மூலமாக அறிமுகமாகி சில மாதங்களில் திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் இருந்து மிளகாய்ப்பொடி வியாபாரம் செய்வதாக கூறி சுமார் 4 லட்சம் பணம் பெற்றதும் தெரியவந்தது.

மிளகாய் பொடி வியாபாரத்திற்காக ஹரிஹரன் என்ற நபர் மூலம் பணம் கொடுத்தாக கூறியதை அடுத்து போலீஸார்  ஹரிஹரனை பிடித்து போலீஸார் செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் அளித்த தகவலின் அடிப்படையில்  தென்காசி TNHB காலனி பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் குமார் துரை (40) என்பவரை  கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்  ஜார்ஜ் குமார் துரை பிரசாந்த் உள்ளிட்ட பெயரில் பல பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் பணம்‌ பறித்தது தெரிய வந்தது ‌‌. 

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி விதித்த கடும் அபராதத்தால் ஐசிஐசிஐ & யெஸ் வங்கிகளுக்கு என்ன பாதிப்பு?

ஜார்ஜ் குமார் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில BTech க்கும், சென்னை ஐஐடியில்  MTech க்கும், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டாம்போர்ட் பல்கலைக்கழகத்தில் MS மேற்படிப்பு படித்திருப்பது தெரியவந்தது.

இவர் கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் டேட்டா அனலைஸ்டாக பணிபுரிந்து வந்தும் பின்னர் தமிழகம் திரும்பிய அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மேட்ரிமோனியல் மூலம்  20-கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுமார்  80 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.. மோசடி செய்த பணத்தில் தென்காசியில் Smart kids Fun School என்ற சிறுவர்களுக்கான 'கிட்ஸ் ஸ்கூல்' நடத்தி வருவதுடன் 
 'அம்மாவின் கைவண்ணம்' என்ற பெயரில் மிளகாய்பொடி நிறுவனம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் மேட்ரிமோனியல் இணையதளத்தில் கார்த்திக், சந்திரன், பிரசாந்த் ஆனந்த், பிரசாத் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் கிடைக்கும் அழகான ஆண் நபர்கள் புகைப்படத்தை எடுத்து அதன் மூலமாக இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம்பறித்து வந்தது தெரியவந்தது.

குறிப்பாக ஜார்ஜ் அமெரிக்காவில்  பணிபுரிந்த போது அமெரிக்க மொபைல் நம்பரில் நான்கு வாட்ஸ் அப் கணக்குகளை தொடங்கி  தற்போது வரை அதனை செயல்பாட்டில் வைத்துக் கொண்டு பெண்களிடம் பேசும்போது அமெரிக்க நம்பர் கொண்ட வாட்ஸ் அப் எண்ணில் இருந்து கால் செய்வதுபோல் பேசி அவர்களை நம்ப வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்..

ஐஐடியில் யில் எம்.டெக் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண்ணை காதலித்ததாகவும், தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் அந்த பெண் தன்னை விட்டு பிரிந்து சென்றதால்  பெண்களை குறிவைத்து  மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது ‌‌.

மேலும் படிக்க | திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News