பிரியாணி போட்டி - 2 கிலோ பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு முதல் பரிசு.!

குமரி அருகே கோவிலில் நடைபெற்ற வெஜிடபிள் பிரியாணி போட்டி!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 12, 2022, 09:27 PM IST
  • கன்னியாகுமரியில் களைகட்டிய பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
  • வித்தியாசமான முறையில் நடைபெற்ற வெஜிடபிள் பிரியாணிப் போட்டி
  • 13 நிமிடத்தில் 2 கிலோ பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு முதல் பரிசு
பிரியாணி போட்டி - 2 கிலோ பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு முதல் பரிசு.! title=

வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில் பிரபலமான ஒரு காமெடி வரும். அதாவது, அதிக பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு பரிசும், சாப்பிட்ட பரோட்டாக்களுக்கு பணமும் தர வேண்டாம் என்று. சொன்ன அளவைவிட அதிகமாகவே சாப்பிடத் தயாராகும் காமெடி நடிகர் சூரியின் செயல், அனைவருக்கும் சிரிப்பலையை வரவழைத்தது. இந்த காமெடியைப் போல ஒரு ருசிகர சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. பூலன்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளூரில் பிரச்சித்திப் பெற்றது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், வித்தியாசமான முறையில் வெஜிடபிள் பிரியாணி போட்டி நடைபெற்றது. 

மேலும் படிக்க | பிரியாணி கடையில் ரகளை - காவல் நிலையத்தில் "விருந்து" வைத்த போலீஸ்..!

போட்டியின் விதிமுறை என்னவென்றால், இரண்டு கிலோ வெஜிடபிள் பிரியாணியை முதலில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 2000 ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டது. அசாத்தியமான இந்தப் போட்டியில் 14 ஆண்கள், ஒரு பெண் உட்பட 15 பேர் கலந்துகொண்டனர். சுடச்சுட வாழை இலையில் விருந்து பறிமாறப்பட்டது. 13 நிமிடத்தில் இரண்டு கிலோ வெஜிடபிள் பிரியாணியையும் வினு என்ற இளைஞர் சாப்பிட்டு முடித்து முதல் பரிசைத் தட்டிச்சென்றார். இரண்டாம் பரிசை  பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த தனிஷ்  என்பவர் தட்டிச் சென்றார். கட்டி மங்காடு  கிராமத்தைச் சேர்ந்த  சந்தோஷ் என்பவர் மூன்றாம் பரிசினைப் பெற்றார்.

13 நிமிடத்தில் பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசைப் பெற்ற வினு கூறுகையில், ‘நான் ஏற்கனவே, பரோட்டா சாப்பிடும் போட்டியில் 43 புரோட்டா சாப்பிட்டு முதல் பரிசை வாங்கியிருக்கிறேன். தற்போது வெஜிடபிள் பிரியாணி போட்டியிலும் முதல் பரிசைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி’ என்றார்.
கோவில் திருவிழாவில் நடைபெற்ற இந்த வெஜிடபிள் பிரியாணி போட்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: விபூதி பூசி பய பக்தியுடன் திருட்டு... முதியவருக்கு போலீஸ் வலைவீச்சு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News