கோவையில் கனமழை மழைநீரால் சுரங்கப்பாதைக்குள் அடித்துச் செல்லப்பட்ட கார்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 5, 2021, 01:38 AM IST
கோவையில் கனமழை மழைநீரால் சுரங்கப்பாதைக்குள் அடித்துச் செல்லப்பட்ட கார்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.  கோவையில் ரயில் நிலையம், காந்திபுரம், லட்சுமி மில், புளியகுளம் ,வடவள்ளி, இடையர்பாளையம், டவுன்ஹால், பெரிய கடை வீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.

ALSO READ CPR முதலுதவி செய்து மாணவர் உயிரை காப்பாற்றிய நர்ஸ்! குவியும் பாராட்டு…

அனைத்து சாலைகளிலும் மழை நீர்  பெருக்கெடுத்து ஓடி வருகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் கிக்கானி மேம்பாலம், கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலம் அடியிலும் நீர் அதிக அளவு தேங்கியதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. 

car

பல பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். அவினாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலம் மழைநீர் தேங்கியுள்ளது இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் மழைநீரில் கார் ஓன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது. காரில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு அதிர்ஷ்டவமாக உயிர்தப்பியுள்ளனர். காரை மீட்பதற்காக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

ALSO READ ’அம்மா வழியில் அதிமுக’ EPS, OPS போட்டியின்றி தேர்வு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News