வரும் ஜூலை 19-ஆம் நாள் முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விடுவிக்க ஆணை பிரப்பிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து தமிழக அரசு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது..
மேட்டூர் அணை வழக்கமாக திறக்கும் நாளான ஜூன் 12-ஆம் நாள் அன்று போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் பாசனத்திற்கா நீர் திறக்க இயலாத நிலையில், ரூ.1567 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவரை அடுத்து, மேட்டூர் அணையில் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.18 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 99,372 கன அடியாகும், அணையின் நீர் இருப்பு 51.72 டிஎம்சி அடியாகவும் உள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதனையடுத்து வரும் ஜூலை 19-ஆம் நாள் முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விடுவிக்க ஆணை பிரப்பிக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.