தமிழகம் ரேசன் கடைகளில் CCTV கேமரா பொருத்த ரூ.97 கோடி...

தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் என நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

Last Updated : Jan 13, 2019, 12:58 PM IST
தமிழகம் ரேசன் கடைகளில் CCTV கேமரா பொருத்த ரூ.97 கோடி...  title=

தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் என நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

ரேஷன் பொருட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்த புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை அபிராமபுரம் நியாய விலைக்கடை ஊழியர் கீதா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமாரிடம் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் உள்ள 1,455 நியாயவிலைக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் 20 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பரிந்துரை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை வரும் 28 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய, அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

 

Trending News