சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. நான்கு தளங்களில் உள்ள வீடுகளில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்தது பார்க்க அச்சம் அளிப்பதாக இருந்தது. சென்னை அண்ணா நகர் 2ஆவது மெயின் ரோட்டில் அப்பல்லோ செஜௌர் (Apollo Sejour) என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 4 தளங்களில் 8 வீடுகள் உள்ளது. குடியிருப்பு வளாகத்தின் நான்காவது தளத்தில் உள்ள வீட்டில் ஈஷா, உமேமத் என்ற தம்பதியும் அவர்களின் மகள், பேரன்,பேத்தி என மொத்தம் 5 பேர் வசித்து வந்தனர். நேற்று (2022 ஆகஸ்ட் 6) இரவு 11 மணியளவில் ஹாலில் உள்ள ஸ்விட்ச் போர்டில் மின்கசிவு ஏற்பட்டு மெல்ல தீ பிடிக்க தொடங்கியுள்ளது.
தீயை அணைக்க வீட்டில் இருந்தவர்கள் முயற்சி செய்தும் தீயை அணைக்க முடியவில்லை. தீ மேலும் பரவியதால் வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அந்த குடியிருப்பில் வசித்த அனைவரும் வீடுகளில் இருந்து கீழே இறங்கி சாலைக்கு வந்துவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணியில் ஜே.ஜே நகர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களுடன் 15 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க | கொலை செய்தவரை கிராம மக்களே அடித்து கொன்ற கொடூரம்
முதலில் நான்காவது மாடியில் பற்றிய தீ,மற்ற வீடுகளுக்கு பரவாமல் அடுத்த அரை மணிநேரத்தில் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், தீ விபத்து நடந்த நான்காவது மாடியில் இருந்த வீடு முழுவதும் பரவிய தீயால், வீட்டில் குறிப்பாக ஹாலில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து கருகியதாக தீயணைப்புப் படையினர் தகவல் தெரிவித்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அனைவரும் வெளியேறியதால் உயிர் சேதமின்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணி அளவில் ஹாலில் இருந்த ஸ்விட்ச் போர்டில் மின்கசிவு ஏற்பட்டது. தீ மெல்ல பரவ தொடங்கியதும் அதை அணைக்க முயற்சி செய்தும் பயன் அளிக்கவில்லை என்பதால், உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வந்துவிட்டோம் என்றும், விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் என வீட்டின் உரிமையாளர் ஈஷா தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ