சென்னையில் உணரப்பட்ட நில அதிர்வு! சுனாமி அபாயம்?

வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையின் டைடல் பார்க் உள்ளிட்ட சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.1 அலகுகளாக பதிவாகி இருந்தது. 

Updated: Feb 12, 2019, 02:11 PM IST
சென்னையில் உணரப்பட்ட நில அதிர்வு! சுனாமி அபாயம்?

வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையின் டைடல் பார்க் உள்ளிட்ட சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.1 அலகுகளாக பதிவாகி இருந்தது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

இன்று காலை இந்திய நேரப்படி சுமார் 7.02 நிமிட அளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே வடகிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்துக்குக் கீழே 10 மீட்டர் ஆழத்தில் நிலநகடுக்கம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட்பிளேரில் உள்ள நிலநடுக்க கருவிகளில் பதிவாகியுள்ளது. இது கடல் பகுதியில் நேரிட்டதால் நிலப்பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.