மிக்ஜாம் புயல்: சென்னையில் 47 ஆண்டுகள் பார்க்காத மழை - தீவாக மாறிய அபார்ட்மென்ஸ்

மிக்ஜாம் புயல் அப்டேட்; சென்னையில் கொட்டும் 47 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்யும் வரலாறு காணாத மழை காரணமாக அப்பார்ட்மென்ட் வீடுகள் எல்லாம் தனி தீவுகளாக மாறியிருக்கின்றன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 4, 2023, 01:49 PM IST
  • வரலாறு காணாத மழை சென்னையில்
  • 47 ஆண்டுகளுக்குப் பிறகு கொட்டி தீர்க்கிறது
  • 2015 போல் வெள்ளக்காடாக மாறியது
மிக்ஜாம் புயல்:  சென்னையில் 47 ஆண்டுகள் பார்க்காத மழை - தீவாக மாறிய அபார்ட்மென்ஸ் title=

சென்னையில் கொட்டும் கனமழை

வங்க கடலில் உருவாகியிருக்கும் மிக்ஜாம் புயல் வலுவான புயலாக மாறி, ஆந்திராவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியிருக்கும் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. பெருங்குடி, தாம்பரம், வேளச்சேரி, ஆவடி உள்ளிட்ட பல நகரங்களில் இடுப்பளவுக்கும் மேல் தண்ணீர் தேங்கியிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்து மூழ்கடித்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களிலும், அரசின் நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்திருக்கின்றனர். அப்பார்ட்மென்டுகள் எல்லாம் தனித்தீவுகள் போல் காட்சியளிக்கின்றன.

மேலும் படிக்க | சென்னை மக்களே அலெர்ட்... நிக்காமல் வெளுக்கும் மிக்ஜாம்... வெதர்மேனின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

அதிகபட்ச மழை எங்கே?

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சோழிங்கநல்லூர், பெருங்குடி, கோடம்பாக்கத்தில் தலா 18 சென்டி மீட்டர் மழைப் பொழிந்துள்ளது. மதுரவாயல், கத்திவாக்கம், அம்பத்தூர், மீனம்பாக்கம் பகுதிகளிலும் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதே போன்று, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. சென்னை எண்ணூரில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஆவடி  280 மி.மீ கொட்டி தீர்த்திருக்கிறது. இதுவரை இவ்வளவு மழை அங்கே  பொழிந்ததே இல்லை. இதற்கு அடுத்தபடியாக சோழவரம் - 200 மி.மீ, பொன்னேரி -190 மி.மீ, செங்குன்றம் - 170 மி.மீ, தாமரைப்பக்கம் - 170 மி.மீ, கும்மிடிப்பூண்டி - 150 மி.மீ, ஊத்துக்கோட்டை - 150 மி.மீ, திருவள்ளூர் - 150 மி.மீ என கொட்டி தீர்த்திருக்கிறது. 

சென்னையில் மழை எப்போது நிற்கும்? 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இப்போது கொட்டிக் கொண்டிருக்கும் கனமழை குறைவதற்கு குறைந்தபட்சம் இன்னும் 9 மணி நேரங்கள் ஆகும் என தனியார் வானிலை நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் 6 மணி நேரத்துக்கு கனமழையே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேசும்போது, கனமழை குறைவதற்கு இன்று இரவு ஆகும் என கூறியுள்ளார். தனியார் வானிலை நிபுணரான பிரதீப் ஜான் மிக்ஜாம் புயல் குறித்து பேசும்போது, புயல் ஆந்திராவை நோக்கி நகரும்போது கனமழை படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | சென்னை புயலில் மனிதர்கள் உள்ளே! முதலைகள் வெளியே... மிக்ஜாம் சூறாவளி வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News