செப்டம்பர் 7 முதல் இந்த மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறப்பு: நேரடி விசாரணைகள் நடக்கும்!!

கொரோனா தொற்று காரணமாக போடப்பட்ட லாக்டௌன் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அன்லாக்-4-ல் முன்னர் இல்லாத அளவிற்கு பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 2, 2020, 03:01 PM IST
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நேரடி வழக்கு விசரணைகள் நடத்தப்படும்.
  • விசாரணையில் உள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், சாட்சிகள் மட்டுமே நீதிமன்றத்திற்குள் செல்லலாம்.
  • அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நீதிமன்றங்களில் எடுக்கப்பட வேண்டும்.
செப்டம்பர் 7 முதல் இந்த மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறப்பு: நேரடி விசாரணைகள் நடக்கும்!!

கொரோனா தொற்று காரணமாக போடப்பட்ட லாக்டௌன் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அன்லாக்-4-ல் (Unlock-4) முன்னர் இல்லாத அளவிற்கு பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம் என அரசாங்கம் கூறியுள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் (Courts) செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நேரடி வழக்கு விசரணைகள் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக தேவைப்படும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் நீதிமன்றங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக அனைத்து விதமான செயல்பாடுகளும் முடங்கியிருந்தது போலவே, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்டது. இதை ஈடு செய்யும் விதமாக, வழக்கு விசாரணைகள் வீடியோ கான்ஃபிரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வந்தன.

அன்லாக்-4-ல் தமிழகத்தில் அதிக அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பல துறைகளில் தடைபட்டிருந்த பணிகள் தொடர்ந்து முன்போல் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ALSO READ: COVID Impact: கலைவாணர் அரங்கத்தில் உள்ள ஆடிடோரியத்தில் நடக்கும் தமிழக சட்டசபைக் கூட்டம்!!

தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்கள் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணையைத் தொடங்கலாம் என உயர் நீதிமன்ற (High Court) தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த உத்தரவில் சில நிபந்தனைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. அதன் படி, விசாரணையில் உள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், சாட்சிகள் மட்டுமே நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் (Preventive Measures) அந்தந்த நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதிகளின் தலைமையில் நடக்க வேண்டும்.

தற்போதைக்கு சில குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற நீதிமன்ற பணிகள் குறித்து செப்டம்பர் 22 ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: வெளிவரும் வேளையில் முடக்கப்படும் சொத்துக்கள்: இது சசிகலாவின் விதியா அல்லது அரசியல் சதியா?

More Stories

Trending News