சென்னை துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட, சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் 'மக்களை தேடி மேயர்' சிறப்பு முகாம் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் இன்று (மே 3) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் துணை மேயர் மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய மேயர் பிரியா ராஜன்,"மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாம் இன்று மண்டலம் 5இல் தொடங்கப்பட்டுள்ளது. தொகுதி சார்ந்த எந்த பிரச்சினையாக இருந்தாலும் மனுக்கள் கொடுக்கலாம்.
மேலும் படிக்க | அதிமுக அல்லது திமுக: எந்த கூட்டணியில் பாமக? அன்புமணி ராமதாஸ் போடும் கணக்கு
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை 15 நாட்களுக்குள் உடனடியாக தீர்வு காணப்படும். மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாம் அனைத்து மண்டலங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டு அறிந்து தங்களிடம் மனுக்கள் தரப்பட்டு உரிய தீர்வு காணப்படும்" என தெரிவித்தார்..
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,"கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஊழல் நடைபெற்றுள்ளது" என்றார். அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுத்ததா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசி அமைச்சர் சேகர் பாபு, "தவறு யார் செய்தாலும் திமுக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும். உப்பு தின்றவன், தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்" என்றார்.
நேற்று பெரம்பூர் பார்க்ஸ் சாலையில் பழமையான வாய்ந்த நூற்றாண்டு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "சென்னை மாநகராட்சி சார்பில் கட்டடத்தை இடிக்க ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அங்கு பேரிகார்ட் போடப்பட்டு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இடிந்து விழுந்த கட்டிடத்தை நேற்று இரவோடு இரவாக முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டது" என்றார்.
மேலும் படிக்க | அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட டி.ஆர். பாலு... 8ஆம் தேதி கிரிமினல் வழக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ