தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மிகவும் குளிர்ச்சியாக வானிலை நிலவி வருகிறது.. இதனால், கோடையால் வாடிய மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளன.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறும்போது...! தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் இன்னும் 3 நாட்களுக்கு கன மழை தொடரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று நீலகிரி போன்ற மழை பிரதேசங்களில் அதிக அளவில் மழை பெய்தது. அந்த மழை இன்று தொடர வாய்ப்புள்ளது. வங்க கடலில் ஏற்படும் பருவநிலையை பொருத்து, மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. விரிஞ்சிபுரம், கேளம்பாக்கம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., அரிமளம், செய்யாறு, காஞ்சீபுரத்தில் 6 செ.மீ., ஆலங்குடி, செம்பரம்பாக்கத்தில் தலா 5 செ.மீ., சென்னை, அரியலூர், வந்தவாசி, தேவக்கோட்டை, நிலக்கோட்டை, சென்னை விமானநிலையம், டி.ஜி.பி. அலுவலகம், திருப்பத்தூர், குமாரபாளையம், திருவாலங்காடு, கடலூர், செய்யூர், காட்டுக்குப்பத்தில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.