சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு?

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் சேவை நேரம் விரைவில் நீட்டிக்கப்பட உள்ளது.

Last Updated : Mar 29, 2019, 09:29 AM IST
சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு? title=

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் சேவை நேரம் விரைவில் நீட்டிக்கப்பட உள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் சேவை நேரம் தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை மற்றும் பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து, விமான நிலையத்துக்கு, அதிகாலை, 5:56 மணியில் இருந்து, இரவு, 10:08 மணி வரையும், விமான நிலையத்தில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை, 5:54 மணியில் இருந்து, இரவு, 10:06 மணி வரையும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வண்ணாரப்பேட்டையில் இருந்து, விமான நிலையத்துக்கு, காலை, 6:03 மணியில் இருந்து, இரவு, 10:01 மணிவரையும், விமான நிலையத்தில் இருந்து, வண்ணாரப்பேட்டைக்கு, காலை, 6:04 மணியில் இருந்து, இரவு, 10:02 மணிவரையும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்ட்ரலில் இருந்து, பரங்கிமலைக்கு, காலை, 6:03 மணியில் இருந்து இரவு, 10:01 மணி வரையும், பரங்கிமலையில் இருந்து, சென்ட்ரலுக்கு, காலை, 6:06 மணியில் இருந்து இரவு, 10:04 மணி வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதையொட்டி, மெட்ரோ ரயில் போக்குவரத்து, அதிகாலை, 4:30 மணியில் இருந்து இரவு, 11:00 மணி வரை, விரைவில் நீட்டிக்கப்பட உள்ளது. இந்த நீட்டிப்பில், அதிகாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை, அரை மணி நேர இடைவெளியில், ரயில் இயக்கவும், பயணியர் வருகையையொட்டி, ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக ஷேர் ஆட்டோ, டாக்சி, மினிபஸ் சேவையும் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் வாடகைக்கு விடும் வசதியும் செயல்பாட்டில் உள்ளது.

Trending News