சென்னை: உரிமையாளர் பெண்ணுக்கு சீர் செய்த வடமாநில தொழிலாளர்கள்

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுதவாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், சென்னை பூவிருந்தவல்லியில் உரிமையாளர் பெண்ணுக்கு வட மாநில தொழிலாளர்கள் சீர்வரிசை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 13, 2023, 02:41 PM IST
சென்னை: உரிமையாளர் பெண்ணுக்கு சீர் செய்த வடமாநில தொழிலாளர்கள் title=

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி-பத்மாவதி தம்பதியினர். இவர்களின் மகள் விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்டுமான நிறுவன உரிமையாளரான ராஜாமணி  தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை உறவினர்போல் பாவித்து விழாவிற்கு  அழைப்பு விடுத்து இருந்தார். அழைப்பை ஏற்று 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் சகோதரத்துவ எண்ணத்துடன் கையில் சீர்வரிசையுடன் வந்து விழா பெண்ணிற்கு நலங்கு வைத்து  அசத்தினர். 

மேலும் படிக்க | மகன், மகள்கள் சொத்தை அபகரித்து விட்டனர்... பேத்தியுடன் வந்து முதியவர் மனு!

இந்நிகழ்வு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து  உறவினர்கள்போல் அவர்கள் பெண்ணிற்கு மலர் தூவி ஆசீர்வாதம் வழங்கியும் அன்பை பரிமாறினர். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வந்த நிலையில் வட மாநில தொழிலாளர்களை உறவினர் போல் பாவித்து அவர்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்ட நிகழ்வு வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் பீகாரில் இருக்கும் பாஜக தலைவர்கள் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்பினர். 

அதற்காக வேறு மாநிலங்களை அரங்கேறிய குற்றச்சம்பவங்களை தமிழ்நாட்டில் நடப்பதாக கேப்சனிட்டு வீடியோவும் வெளியிட்டனர். இதனை பிரபல செய்தி நிறுவனங்களை உண்மை தன்மையை ஆராயாமல் பொய் செய்தியை வெளியிட்டனர். தமிழக அரசும், பீகார் மாநில அரசும் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்த வதந்திகள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன.

மேலும் படிக்க | தமிழக மீனவர்கள் 16 பேர் கைது - தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்..!

மேலும் படிக்க | வந்துவிட்டது பிரியாணி ATM... அதுவும் சென்னையில் - இனி எப்போதும் சுட சுட சாப்பிடலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News