சென்னையில் இரவு முதல் கனமழை எதிரொலியாக கூவம் அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னையில் இரவு முழுவதும் கன மழை பெய்து வரும் கன மழையினால், சாலை எங்கும் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் இன்று (07.11.2021) காலை10.30 மணி முதல் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், எழும்பூர், டவுட்டன், கே.என் கார்டன், படலம், புதிய அரண்மனை சாலை, ஓட்டேரி இடது பாலம், கான்பூர் நெடுஞ்சாலை, பாடி பாலம், சத்யா நகர் தங்குமிடம், பாபா நகர், ஜிகேஎம் காலனி, ஜவஹர் நகர், காகித ஆலை சாலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.
ALSO READ | சென்னையில் கனமழை: பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; மக்கள் அவதி..!!
தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் தேங்கிய மழை நீரால் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்துவரும் கனமழையால் ராயபுரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ராஜாராம் என்பவர் உயிரிழந்துள்ளார். இரவு 11.30 மணியளவில் வீடு இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. பலத்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் ராஜாராமின் உடலை சடலமாக மீட்டனர்.
முன்னதாக, சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மிதமான மழை, அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Also Read | விஜய்சேதுபதியை தாக்கிய காரணம்! உண்மையை உடைத்த காந்தி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR