'தமிழகத்தில் வெயில் குறைய இது ஒன்றுதான் வழி...' வானிலை ஆய்வு மையம்

Tamilnadu Summer Heat Wave: சென்னையில் கோடை  மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தமிழகத்தில் கோடை  மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 3, 2024, 05:27 PM IST
  • வட தமிழக ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசியது
  • தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 3-5 டிகிரி வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.
  • கரூரில் 44.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
'தமிழகத்தில் வெயில் குறைய இது ஒன்றுதான் வழி...' வானிலை ஆய்வு மையம் title=

Tamilnadu Summer Heat Level: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூரில் 44.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. உள் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் 3-5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தி, ஈரோடு, தர்மபுரி, திருத்தணி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களான பத்து இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 42 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக பதிவாகியுள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை

அதிகபட்சமாக கரூரில் 44.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இயல்பை விட அதிகமாக உள்ளது. வட தமிழக ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசியது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 3-5 டிகிரி  வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | கடும் கோடையில்... ரோட்டில் சிந்தும் தண்ணீரை குடிக்கும் அவல நிலையில் குரங்குகள்..!!

அடுத்த இரண்டு தினங்களுக்கு சென்னையில் 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும். சென்னையில் கோடை  மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்புள்ளது. மண்ணின் தன்மையை பொருத்து வெப்ப காற்று மாறுபடுகிறது. உள் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் 3-5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும்" என்றார்.

மிதமான மழை

முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (மே 3) வெளியிட்ட அறிக்கையின்படி,"இன்றும், நாளையும் வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மே 5, 6ஆம் தேதிகளில் வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 3ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரை தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். இந்த வெயிலை சமாளிக்க மக்கள் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும், மதிய உச்சி வெயில் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி திறப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News