சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்..அருகிலேயே வீடுகள் ஒதுக்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மயிலாப்பூரில் அகற்றப்படும் குடியிருப்புவாசிகள் மந்தைவெளி, மயிலாப்பூரில்  தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் குடி அமர்த்தப்படுவார்கள் என சட்டப்பேரவையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : May 9, 2022, 03:25 PM IST
  • ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
  • அருகிலேயே வீடுகள் ஒதுக்கப்படும்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்..அருகிலேயே வீடுகள் ஒதுக்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு title=

மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் அகற்றப்படும் குடியிருப்புவாசிகள் மந்தைவெளி, மயிலாப்பூரில்  தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் குடி அமர்த்தப்படுவார்கள் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 300 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி, நேற்று அவற்றை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் ஈடுபட்டனர். அப்போது, கண்ணையா என்ற நபர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். 

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மயிலாப்பூரில் விரும்பத்தகாத ஒரு நிகழ்வு நடைபெற்று விட்டதாகவும், கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணையா என்பவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில் மிகுந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | விக்னேஷ் லாக்கப் மரணமும் சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பும்

இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, அந்தப் பகுதியில் உள்ள மக்களுடன் பேசி அவர்கள் விரும்பக்கூடிய இடத்தில் மறு குடியமர்வு  செய்து அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும் அத்தகைய மக்கள் குடியமர்த்தப்படக் கூடிய பகுதிகளில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனவும், இது தொடர்பாக மறு குடியமர்வு கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார் 

மேலும் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டும் எனவும், மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்டு வரும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் அப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட கூடிய மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் படிக்க | தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்: தடை நீக்கி உத்தரவு!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News