பாசனத்திற்காக சாத்தனூர் அணை திறக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!

பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று தமிழக முதலவர் பழனிசாமி அவர்கள் சாத்தனூர் அணை மற்றும் கெலவரப்பள்ளி நீர்தேக்கத்திலிருந்து நீர் திறக்கபடும் என தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 1, 2018, 11:21 PM IST
பாசனத்திற்காக சாத்தனூர் அணை திறக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு! title=

பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று தமிழக முதலவர் பழனிசாமி அவர்கள் சாத்தனூர் அணை மற்றும் கெலவரப்பள்ளி நீர்தேக்கத்திலிருந்து நீர் திறக்கபடும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...

"திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து, 2018 ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 45,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களில் முறையே விநாடிக்கு 350 கன அடி மற்றும் விநாடிக்கு 220 கன அடி என, மொத்தம் 570 கன அடி வீதம் 7.2.2018 முதல் 8.5.2018 வரையில் 90 நாட்களுக்குத் தொடர்ந்து தண்ணீரை வழங்குவதற்கும், திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டின் 5,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக சாகுபடிக்கு 1200 மி. கன அடி நீரினை நீர் பங்கீடு விதியின்படி பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதத்திற்குள், தேவைக்கேற்ப, இரண்டு தவணைகளில் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். 

இதனால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்."

இதேப்போல் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம் திறப்பது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு 4.2.2018 முதல் 4.5.2018 வரை, 90 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"

என குறிப்பிட்டுள்ளார்!

Trending News