கனிமொழியின் ஒரே ட்வீட்!! தாய்மொழி தெரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் CISF

CISF ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  உள்ளூர் மொழி தெரிந்த நபர்கள் விமான நிலையங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என CISF கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 12, 2020, 06:15 PM IST
  • சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த ஒரு அதிகாரி, திமுக எம்.பி. கனிமொழி ஒரு இந்தியரா என கேள்வி எழுப்பினார்.
  • இந்தியராக இருப்பதற்கும் இந்தி அறிந்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம் – கனிமொழி.
  • உள்ளூர் மொழியை நன்கு அறிந்த நபர்களை பணியமர்த்த CISF முயற்சிக்கும் - அனில் பாண்டே.
கனிமொழியின் ஒரே ட்வீட்!! தாய்மொழி தெரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் CISF title=

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த ஒரு அதிகாரி, திமுக எம்.பி. கனிமொழி (DMK MP Kanimozhi) இந்தியில் சரளமாக பேசாததால், அவர் ஒரு இந்தியரா என கேள்வி எழுப்பினார். இது நாடு முழுவதும் பல அரசியல் தலைவர்களை கோபப்படுத்தியதோடு பல எதிர்வினைகளையும் உண்டு பண்னியது. இதைத் தொடர்ந்து CISF ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  உள்ளூர் மொழி தெரிந்த நபர்கள் விமான நிலையங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என CISF கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, கனிமொழி ட்வீட் செய்து, "இன்று, விமான நிலையத்தில், எனக்கு இந்தி தெரியாததால் என்னிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி நான் கூறியதற்கு ‘நான் ஒரு இந்தியனா’ என ஒரு CISF அதிகாரி கேள்வி எழுப்பினார். ஒரு இந்தியராக இருப்பதற்கும் இந்தி அறிந்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம் என எனக்குத் தெரிய வேண்டும்" என எழுதியிருந்தார்.

உள்ளூர் மக்கள் அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள வேண்டிய ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்கள் போன்ற இடங்களில் வட இந்தியர்களை நிறுத்துவதற்கு எதிராக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரத்திற்கு உடனடியாக பதிலளித்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதாக கூறியிருந்தது. CISF அளித்த ஒரு விளக்கமான ட்வீட்டில், "இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு CISF உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது CISF கொள்கை அல்ல." என்று கூறியிருந்தது.

CISF-ன் DIG மற்றும் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் அனில் பாண்டே, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) பயணிகளுக்கு உதவுவதற்காக விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்திருக்கும் அதிகமான பணியாளர்களை இனி பணியமர்த்தும் என அறிவித்தார்.

ALSO READ: இது இந்தியாவா? "இந்தி" யாவா? புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்: MKS

பயணிகளை சோதனை இடுவது, சோதனைக்காக அழைத்துச் செல்வது மற்றும் பிற முன்னணி கடமைகளில் உள்ளூர் மொழியை (Local Language) நன்கு அறிந்த நபர்களை பணியமர்த்த CISF முயற்சிக்கும் என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்தன. இந்த வேலை தொழில்நுட்ப மற்றும் நடத்தை திறன்களை உள்ளடக்கியிருப்பதால், அத்தகைய கடமைகளில் 100% பணியமர்த்தலை அடைய முடியாது என்பதும் உண்மை.

தனிநபர்களுக்கிடையேயான உரையாடலின் போது தவறான புரிதல்கள் ஏற்படுவதற்கான சாத்தியத்தை அனில் பாண்டே ஒப்புக் கொண்டாலும், “உரையாடல்களின் போது இதுபோன்ற மொழி இடைவெளி இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் இப்போது முடிந்தவரை நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழியின் கட்சி புதிய கல்விக் கொள்கையின் மூன்று மொழி சூத்திரத்தை கடுமையாக எதிர்க்கும் நேரத்தில் இந்த விமான நிலைய சம்பவம் வெளி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: பொய் சொல்லி மாட்டிக் கொண்டாரா கனிமொழி... சூடு பிடிக்கும் அரசியல் களம்...!!!

Trending News