பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் 1923ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். அவரது பிறந்தநாளை ஒட்டி குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, தாய்க்கு மாலை அணிவித்து காலைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றார்.
முன்னதாக தாயுடன் பூஜை செய்துவிட்டு. பின்னர் அவர் பாதங்களைக் கழுவி பாதை பூஜை செய்து, அந்தத் தண்ணீரை தன் கண்களில் தடவிக்கொண்டார். பின்னர், அவருக்கு மாலையும், ஷால்வையும் அணிவித்தார்.
மேலும் படிக்க | அக்னிபாத் திட்டத்தை கைவிடுங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவு செய்த அவர், “வீட்டுச் செலவை சமாளிக்க எனது தாயார் நிறைய வீடுகளில் பாத்திரம் தேய்த்தார். ராட்டை சுற்றுவார். பருத்தி பறிப்பார். நூல் நூற்பது தொடங்கி வீட்டு வேலை வரை எங்களைக் காப்பாற்ற எல்லா வேலைகளையும் செய்தார்.
Maa…this isn’t a mere word but it captures a range of emotions. Today, 18th June is the day my Mother Heeraba enters her 100th year. On this special day, I have penned a few thoughts expressing joy and gratitude. https://t.co/KnhBmUp2se
— Narendra Modi (@narendramodi) June 18, 2022
வலி மிகுந்த வேலைகளுக்கு இடையேயும் கூட பருத்தி முள் எங்களைக் குத்திவிடக்கூடாது என வீட்டை சுத்தம் செய்வார். ஒருவேளை என் தந்தை உயிரோடு இருந்திருந்தால் அவரும் இந்த ஆண்டு நூற்றாண்டு பிறந்தநாளை எட்டியிருப்பார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கும் அவரது தாய்க்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் அம்மா 100ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Dear @narendraModi, I am very happy to know that your mother is entering her 100th year.
I am well aware of your love towards mother & fondly recall you enquiring about my mother's health each time you visit Chennai.
I convey my best wishes to both of you on this special day.
— M.K.Stalin (@mkstalin) June 18, 2022
அம்மா மீது உங்களுக்கு இருக்கும் அன்பை நான் நன்கு அறிவேன், ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போதும் என் அம்மாவின் உடல்நிலை குறித்து விசாரித்ததை அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சிறப்பான நாளில் உங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR