சென்னை: சென்னை: வேலூரில் குரங்கை கட்டிவைத்து துன்புறுத்தி குத்திக் கொன்ற கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி) மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 மருத்துவ கல்லூரி மாணவர்களால் குரங்கு கொடூரமான முறையில் கொல்லப்பட்டது என்று விலங்குகள் நல ஆர்வலர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு கொல்லப்பட்ட சம்பவம் சனிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் கல்லூரி தங்கும் விடுதியில் நடைபெற்று உள்ளது. பின்னர் அவர்கள் அந்த குரங்கை கல்லூரி விடுதியில் உள்ள உணவகம் அருகில் புதைத்துள்ளனர். இதனையடுத்து ஷரவண் கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர், குரங்கு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து மாணவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாணவர்களிடம் விசாரித்து உள்ளனர். குரங்குக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குரங்கின் கழுத்து, கைகள் மற்றும் கால்கள் செல்போன் வயரால் கட்டப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. அடிப்பட்டதில் குரங்கின் முழங்கால், கழுத்து மற்றும் கணுக்காலில் எழும்புகள் முறிந்து உள்ளது.
ஏற்கனவே சென்னையை சேர்ந்த இரு மருத்துவ மாணவர்கள் நாயை வீட்டின் மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் மருத்துவ மாணவர்களால் இது போன்ற கொடூர சம்பவமானது நிகழ்ந்து உள்ளது.