எளிமையின் உருவமான ரஜினிகாந்தை சந்தித்தேன். அவரது வார்த்தைகள் ஊக்கமளித்தன: டி.இமான்

முதல் நாள் படப்பிடிப்பில் ஐயா ரஜினியின் நேர்மறையான வார்த்தைகள் மிகவும் ஊக்கமளித்தன. என்ன ஒரு ஒளி. கடவுளை புகழ் என இசையமைப்பாளர் டி.இமான் ட்வீட் செய்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 20, 2019, 05:47 AM IST
எளிமையின் உருவமான ரஜினிகாந்தை சந்தித்தேன். அவரது வார்த்தைகள் ஊக்கமளித்தன: டி.இமான் title=

புது டெல்லி: தலைவர் 168 படத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்பத்தை அளித்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தனது 168 வது படத்திற்காக விஸ்வாசம் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கைகோர்த்துள்ளார். இப்படம் கிராமப்புற பொழுதுபோக்கு அம்சமாக எடுக்கப்பட உள்ளது. நடிகர் விஜய்யின் "சர்க்கார்" படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தலைவர் 168 படம் மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அந்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நடிக்கும் 168 வது படத்திற்க்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் டி.இமான், எளிமையின் உருவமான ரஜினிகாந்தை சந்தித்தேன். அவரது நேர்மறையான வார்த்தைகள் மிகவும் ஊக்கமளித்தன என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான் கூறியது, ரஜினிகாந்த் ஐயாவுடன் ஒரு பாடலுடன் தொடங்கிய முதல் நாள் படப்பிடிப்பு. பாடலைப் பற்றிய அவரது நேர்மறையான வார்த்தைகள் மிகவும் ஊக்கமளித்தன. என்ன ஒரு ஒளி. இந்த மனிதன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆற்றலை அளிக்கக்கூடியவராக இருக்கிறார். தன்னை சுற்றி ஒரு சக்தியை வைத்துள்ளார். கடவுளை புகழ்!! என பதிவிட்டுள்ளார்.

 

தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்க உள்ளனர். நேற்று முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட இசையமைப்பாளர் டி.இமான், சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த பின்பு தான், அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News