வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வழக்கறிஞர் கடந்த 12ஆம் தேதியன்று தமிழக ஊழல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கடந்த 2016-2021 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பதவியில் இருந்த ஆர்.பி.உதயகுமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிகளவிற்கு சொத்து குவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக அரசில் அமைச்சராக இருந்த காலத்தில், தனக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் மூலமாக பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அம்மா ட்ரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளதாகவும் அந்த மனுவில் வழக்கறிஞர் தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | EPS க்கு பொதுச்செயலாளர் பதவி
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், தினேஷின் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக அழைத்தனர். லஞ்ச ஒழிப்புத்துகையில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்ற புகார்தாரரான வழக்கறிஞர் தினேஷ், மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் குறித்த விசாரணைக்காக வந்தார்.
புகார்தாரர் வழக்கறிஞர் தினேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை துணைகண்காணிப்பாளர் புகாரின் தன்மை குறித்தும், புகாரில் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ஓபிஎஸ் திமுகவின் B டீம்...
விசாரணை முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் தினேஷ், ஆர்.பி.உதயகுமார் பதவியில் இருந்தபோது அம்மா ட்ரஸ்ட் என்ற பெயரில் பொதுமக்களுக்கு சைக்கிள் உள்ளிட்ட பரிசுபொருட்களை வழங்கி முறைகேடு செய்ததாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் அதிகளவிற்கான வருமானத்தை காட்டியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தினேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆர் பி உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை வளையத்தில் முன்னாள் அமைச்சர் வந்துள்ளார் என்று தெரிய வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!