OPS vs EPS : போருக்கு தயாரான ஓபிஎஸ் : சொந்த கட்சி ஊழல் விவரங்களையே வெளியிட போகிறார்

ஜூலை 17ஆம் தேதி முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சொந்த கட்சியினரின் ஊழல் பட்டியலையே வெளியிடுவேன் என்று பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jul 6, 2022, 12:21 PM IST
  • அடுத்த தர்மயுத்தத்துக்கு தயாரான ஓபிஎஸ்
  • அதிமுக மைச்சர்களின் ஊழல் பட்டியல் தயார்
  • கோடநாடு வழக்கையும் வழக்கை விசாரிக்க வலியுறுத்தல்
OPS vs EPS : போருக்கு தயாரான ஓபிஎஸ் : சொந்த கட்சி ஊழல் விவரங்களையே வெளியிட போகிறார் title=

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த விவகாரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் இன்று காலை ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய கோவை செல்வராஜ், “ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டு அழைப்பிதழ் வந்தது. தற்போதைய அழைப்பிதழில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பெயர் இல்லை. ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் தலைமை கழகம் எப்படி கடிதம் அனுப்ப முடியும்? யார் அந்த கடிதம் கொடுத்தார்கள்? ஆனால் அந்தக் கூட்டம் எடப்பாடிக்கு துதி பாடுகிற கூட்டமாகத் தான் இருக்கும்” என்று பேசினார்.

“முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகுதி தராதாரம் இல்லாதவர். அவர் சர்க்கஸ் கம்பெனி கோமாளி, இன்னொருவர்  குடிகார கோமாளி இருவரும் ஓபிஸ் பற்றி தேவையின்றி பேசி வருகிறார்கள்” என்றார் கோவை செல்வராஜ். “ஓ பன்னீர்செல்வத்தை பற்றி பேச ஜெயக்குமாருக்கு  எந்த தகுதியும் உரிமையும் இல்லை. அவர் எப்போதோ போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுருக்க வேண்டும், தொடர்ந்து இதுபோன்று பேசினால் சிறைக்கு அனுப்பப்படுவார்” என்று எச்சரிக்கை விடுத்தார் கோவை செல்வராஜ்.

மேலும் படிக்க | EPS க்கு பொதுச்செயலாளர் பதவி - நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவின் முக்கிய அம்சங்கள்!

தற்போது வந்துள்ள கடிதம் கட்சிக் கடிதமா அல்லது போர்ஜரி கடிதமா என்று தெரியவில்லை அதை யார் அனுப்பியது எனவும் தெரியவில்லை என்று கூறிய கோவை செல்வராஜ் எடப்பாடி அதிமுகவின் கட்சித் தலைவர் இல்லை ஓ பன்னீர்செல்வம் தான் கட்சித் தலைவர் அவர்கள் போடுவது பெரும் டிராமா எனவும் விமர்சனம் செய்தார்.

மாதவரம் மூர்த்தியை கட்சி கூட்டத்திற்கு வரவழைத்து ஒற்றைத் தலைமையை குறித்து பேச வைத்தவர் எடப்பாடி எனவும் எடப்பாடிக்கு அதிமுக என்ன குடும்பக் கட்சியா அல்ல அவர் அதிமுக நிறுவனரா எனவும் கேள்வி எழுப்பிய கோவை செல்வராஜ், அதிமுக எடப்பாடி உருவாக்கிய கட்சி அல்ல இது எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி என்று பேசினார்.

கொடநாடு வழக்கு 4 வருடமாக காலம் தாழ்த்தப்பட்டுள்ளது .உரிய முறையில் கடந்த அதிமுக ஆட்சியில் விசாரணை நடைபெறவில்லை. கொடுநாடு வழக்கில் தவறு செய்தவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து கண்டு பிடித்து தண்டனை வாங்கி தர வேண்டும் எனவும்  கோவை செல்வராஜ் பேசினார்.

மேலும் படிக்க | ஓபிஎஸ் திமுகவின் B டீம்... மருது அழகராஜ் கூலிக்கு மாறடிப்பவர் - ஜெயக்குமாரின் அடுக்கடுக்கான விமர்சனம்

தமிழகம் முழுவதும் ஓ பன்னீர்செல்வம் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் எனவும் அனைத்து பகுதிகளிலும் பெட்டி வைத்து ஓட்டு எண்ணிக்கை நடத்தினால் ஒரு கோடி வாக்கு வித்தியாசத்தில் ஓபிஸ் வெற்றி பெறுவார் எனவும் அதிமுக அழிவு பாதைக்கு சென்று கொன்று இருக்கிறது என்றும் கோவை செல்வராஜ் விமர்சித்தார்.

ஜெயக்குமாரை பெற்ற அப்பாவே வந்தாலும்,100 எடப்பாடி பழனிசாமி வந்தாலும்  கூட ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்க முடியாது எனக் காட்டமாக கூறியவர், கொள்ளை கூட்டமாக அவர்கள் செயல்படுகிறார்கள்.கூடிய விரைவில் 17 முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News