தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் ஒரு மீனவர் தனது மீனவ சமூகத்திற்காக நாட்டின் முதல் வானொலி சேனலை நிறுவியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ என்ற மீனவர், மீனவர்களுக்கான இந்தியாவின் முதலலாவது மற்றும் ஒரே வானொலி சேனலான 'கடல் ஒசை FM 90.4' ஐ தொடக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் (Tamilnadu) , பம்பானைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ என்ற மீனவர் சிறுவயதிலிருந்தே வானொலியைக் கேட்பதில் விருப்பம் கொண்டிருந்தார். பெர்னாண்டோ 8 ஆம் வகுப்பு வரை படித்தவர். மீன் பிடிப்பது அவரது தொழில். விவசாயிகளுக்கான தனி வானொலி சேனல் தொடங்கப்பட்டதாக கேட்டபின், அவருக்கு இந்த யோசனை தோன்றியது. விவசாயிக்காக தனி ரேடியோ சேனலை தொடக்க முடியும் என்றால், மீனவர்களுக்கான (Fisherman) ஒரு சேனலை ஏன் தொடங்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது என்று அவர் கூறினார்.
Tamil Nadu: A fisherman from Pamban town of Ramanathapuram district has started 'Kadal Osai FM 90.4', India's first & only radio channel for fishermen. It offers infotainment to listeners - from information on marine & #COVID19 to folk songs sung by fishermen/women & film songs. pic.twitter.com/rVhrlc5Ji0
— ANI (@ANI) November 2, 2020
இந்த சேனலின் திட்டத்தைப் பற்றி பேசிய அவர், எங்கள் சேனல் எங்கள் சமூகத்திற்காக சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்டுள்ள சேனல். இதில் பெண்களின் நாட்டுப்புற பாடல்கள், மீனவர்களின் இசை மற்றும் எங்கள் பிராந்தியத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை நாங்கள் வழங்குகிறோம்.
பாம்பனின் (Pamban) மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதாக ஆம்ஸ்ட்ராங் கூறினார். இந்த சேனல், அவர்களுக்கு உதவ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் சேனல் இப்போது 5-10 கி.மீ. அரசாங்கம் எல்லையை அதிகரித்து பம்பன் தீவுக்கு அனுப்ப வழி வகுக்க வேண்டும்.
ALSO READ | Unlock 5.0: தமிழகம் உட்பட மூன்று மாநிலங்களில் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறப்பு!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR