Crime News: 3 மில்லிகிராம் தங்க நகை கொடுத்து ஒரு லட்சம் அபேஸ் செய்த பலே கில்லாடி

கோவையில் 3 மில்லி கிராம் தங்க நகையை கொடுத்து 2 கிலோ அலுமினியக் குண்டை  கொடுத்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 31, 2022, 10:05 AM IST
Crime News: 3 மில்லிகிராம் தங்க நகை கொடுத்து ஒரு லட்சம் அபேஸ் செய்த பலே கில்லாடி title=

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் ஆர்தி ஸ்டோர்ஸ் என்ற கடையை நடத்தி வருபவர் சரவணன் மற்றும் இந்திராணி  தம்பதி இந்த நிலையில் இந்திராணி  கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  கடையில் இருந்த போது இரு இளைஞர்கள் ஒரு பெண் கடைக்கு வந்து உள்ளனர்.

கடையில் உள்ள இந்திராணியிடம் 3 மில்லி கிராம் தங்க நகையை கொடுத்து உள்ளனர்.   எங்களிடம் 2 கிலோ தங்கம் இருப்பதாகவும், அதனை கொடுக்க தயாராக இருப்பதாகவும், ஒரு லட்சம் ரெடி செய்து கொள்ளுங்கள் நாங்க அதை கொடுத்து விடுகிறோம் என தெரிவித்துள்ளார்.

இதனை  உண்மை என நம்பிய  இந்திராணி கடையில் தனியாக இருந்த நிலையில், இரு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் கடைக்கு வந்து 2 கிலோ  அலுமினிய குண்டும் மற்றும் ஒரு செயின் கொடுத்து ஒரு லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு தலைமறைவாகினர்.

இதனையடுத்து இந்திராணி அருகில் உள்ள தங்க நகை கடைக்கு சென்று பரிசோதனை செய்தபோது அது தங்கம் இல்லை  2 கிலோ அலுமினிய குண்டு இருந்து உள்ளது இந்த சம்பவம் குறித்து கோவை பந்தய நிலைய புகார் அளிக்க பட்டு உள்ளது.

மேலும் படிக்க | காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை போட்டு தள்ளிய மருமகன்!

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  3 மில்லி கிராம் தங்க நகையை கொடுத்து 2 கிலோ அலுமினியக் குண்டை  கொடுத்து ஏமாற்றிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களுக்கு குறிப்பாக தென்னிந்திய பெண்களுக்கு தங்க நகை என்பது அவர்கள் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத ஒரு விஷயமாக பார்க்கிறார்கள். அதோடு, வீட்டில் எந்த ஒரு சுப காரியத்திற்கும் தங்கம் என்பது இன்றியமையாத பொருளாக உள்ளது. 

மேலும் படிக்க | பயங்கர சண்டை... தடுக்க போனது குற்றமா... அடித்து கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News