தஞ்சாவூர் டூ அமெரிக்கா: திருவாசகத்துடன் நடந்தேறிய காதல் திருமணம் - சுவாரஸ்ய பின்னணி

தஞ்சாவூர் மாப்பிள்ளைக்கும், அமெரிக்கா  மணப்பெண்ணுக்கும்  தமிழ்முறைப்படி தேவாரம் திருவாசக பாடலுடன்  கல்யாணம் நடைபெற்றது. பெற்றோர் கடல் கடந்த காதலை சேர்த்து வைத்தனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 19, 2023, 05:53 PM IST
  • கடல் கடந்த காதல் கதை
  • தஞ்சாவூரில் திருமணம்
  • வேட்டி சட்டையில் அமெரிக்கர்கள்
தஞ்சாவூர் டூ அமெரிக்கா: திருவாசகத்துடன் நடந்தேறிய காதல் திருமணம் - சுவாரஸ்ய பின்னணி title=

தஞ்சாவூரை சேர்ந்த சங்கர நாராயணன் (வயது 35 ). இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அமெரிக்கா மசாச்சூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் அன்னி டிக்சன் (35) . இவர் எம்.ஏ. சைக்காலஜி படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சங்கரநாராயணன்- அன்னி டிக்சன்  இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் அன்னோன்யமாக காதலித்து வந்தனர். 

மேலும் படிக்க | 'எனது உடல்நலனைவிட மக்கள் நலனே முக்கியம்' - சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின்

இதையடுத்து சங்கரநாராயணன் அமெரிக்க பெண்ணை காதலித்து வரும் விஷயத்தை தஞ்சையில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் மகனின் காதலை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். இதை போல் அன்னி டிக்சனும் தனது காதலைப் பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் வாங்கினார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.அதன்படி தஞ்சாவூரில்   இன்று காலை சங்கரநாராயணன் - அன்னி டிக்சன் திருமணம் நடைபெற்றது.

 தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் சங்கரநாராயணன் பெற்றோர், உறவினர்கள், அமெரிக்காவில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அன்னி டிக்சன் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமணமானது தமிழில் வேத மந்திரங்கள் ஓதி நடைபெற்றது. மேலும் மணமகன் சங்கரநாராயணன் திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். விழாவில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அனைவரும் தமிழ் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

மேலும் படிக்க | நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்... ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்? - முழு பின்னணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News