TN DGE SSLC Result 2020 அறிவிக்கப்பட்டது; 100% தேர்ச்சி.. அசத்தும் மாணவ-மாணவிகள்

தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் (டி.என்.டி.ஜி.இ - TNDGE) ஆகஸ்ட் 10 திங்கள் அன்று 2020 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2020, 05:53 PM IST
  • தமிழக எஸ்.எஸ்.எல்.சி 10 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியானது.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான dge.tn.gov.in, dge1.tn.nic.in, tnresults.nic.in இல் சரிபார்க்கலாம்.
  • தமிழ்நாடு 10 வது முடிவு 2020ஐ சரிபார்க்க வலைத்தளங்களில் பிறந்த தேதி மற்றும் ரோல் எண்ணை உள்ளிட வேண்டும்
  • ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.
TN DGE SSLC Result 2020 அறிவிக்கப்பட்டது; 100% தேர்ச்சி.. அசத்தும் மாணவ-மாணவிகள் title=

சென்னை: தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் (டி.என்.டி.ஜி.இ - TNDGE) ஆகஸ்ட் 10 திங்கள் அன்று 2020 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தது. தமிழ்நாடு 10 வது முடிவு 2020 (Tamil Nadu 10th result 2020) இப்போது வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. 

மார்ச் 2020 தமிழ்நாடு 10 ஆம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2tn.nic.in ஆகிய இணையதளங்களை பார்வையிடுவதன் மூலம் முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.

ALSO READ  | SSLC Result 2020: மாவட்டம் வாரியாக முதலிடம் பெற்ற மாணவருக்கு ₹ 1 லட்சம் பரிசு!!

மாணவ-மாணவிகள் தங்களது தமிழ்நாடு 10 வது முடிவு 2020 (SSLC Result 2020 declared) ஐ சரிபார்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பிறந்த தேதி மற்றும் ரோல் எண்ணை உள்ளிட வேண்டும்.

நேரடி இணைப்பு:
Download தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு மார்ச் 2020

தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு 2020 (Tamil Nadu Class 10 annual board exam) மார்ச் மாதம் நடைபெற்றது, இருப்பினும், கோவிட் -19 காரணமாக ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு, மாணவர்களின் அரை ஆண்டு மற்றும் காலாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்களை வாரியம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 10 வது வாரியத் தேர்வுக்கு ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.

ALSO READ  | வெளியானது தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி 10 வது முடிவுகள் 2020....முழு விவரம் உள்ளே

தங்கள் மதிப்பெண்கள் மீது சந்தேகம் இருப்பவர்கள் அல்லது மறுபரிசீலனை செய்ய விரும்புவோர் அந்தந்த பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். அதற்கான கோரிக்கையை மாணவர்கள் ஆகஸ்ட் 17 முதல் 25 வரை சமர்ப்பிக்கலாம்.

ஆகஸ்ட் 17 முதல் 25 வரை தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு தற்காலிக அடையாளத் தாள்கள் கிடைக்கும். மாணவர்கள் அந்தந்த பள்ளிகளைத் தொடர்புகொண்டு தங்களது டிஎன் 10 வது அசல் மார்க் ஷீட் 2020 (TN 10th original mark sheet 2020) ஐ சேகரிக்கலாம்.

Trending News