நன்றி முதல்வரே! விட்ராதீங்க முதல்வரே! இயக்குனர் பேரரசு நெகிழ்ச்சி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் குழந்தைகளே தற்கொலை செய்து கொள்ளாதீர்கள், உங்களது தந்தை ஸ்தானத்தில் இருந்து கேட்டு கொள்கிறேன், உங்களுக்காக நான் இருக்கின்றேன்" என்று கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2021, 10:22 PM IST
நன்றி முதல்வரே! விட்ராதீங்க முதல்வரே! இயக்குனர் பேரரசு நெகிழ்ச்சி! title=

இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் அதிகரித்து கொண்டே வருகிறது.  அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கல்லூரி செல்லும் குழந்தைகள் தான் இதுபோன்ற பாலியல் துன்புற்றுதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ALSO READ திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞரை கைது செய்த காவல்துறை

இது போன்ற சம்பவம் நாட்டையே அச்சுறுத்தி வருகின்றது.  இத்தகைய பாலியல் கொடுமையால் பல பெண் குழந்தைகளும், பெண்களும் தற்கொலை செய்து கொள்வது தொடர் அவலமாக நம் நாட்டில் நடந்து வருகிறது.  இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.  அதில் "பெண் குழந்தைகளே தற்கொலை செய்து கொள்ளாதீர்கள், உங்களது தந்தை ஸ்தானத்தில் இருந்து கேட்டு கொள்கிறேன், உங்களுக்காக நான் இருக்கின்றேன்" என்று கூறினார்.  அதனையடுத்து பெண் குழந்தைகள் தனக்கு நேரும் துயரங்களை புகாரளிக்க ஒரு இலவச தொலைபேசி என்னையும் அறிமுகப்படுத்தினார்.

 

தமிழக முதல்வரின் இந்த சேவை குறித்து தமிழ் திரைப்பட இயக்குனர் பேரரசு கூறுகையில், "நம் நாட்டில் கல்லூரிகளிலும், பள்ளிகளும் மேலும் தொழில் மையங்களிலும் பாலியல் தொல்லையும், பாலியல் பலாத்காரமும் தொடர்ந்துகொண்டிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.  இதற்கொரு தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு மக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் அதிகரித்திருக்கும் வேளையில் ஒரு தந்தை ஸ்தானத்தில் வேதனையோடு முதல்வர் கொடுத்திருக்கும் அறிக்கை மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.  

முதல்வரின் உணர்வோடு அதிகாரிகளும் செயல்பட்டால் நிச்சயம் பாலியல் தொல்லைகளும், பலாத்காரங்களும் நம் நாட்டில் குறைய வாய்ப்பிருக்கிறது.  பெண் குழந்தைகள் தன்னை காத்துக்கொள்ள முதல்வர் அறிவித்திருக்கும் தொலைபேசி எண் 1098, அனைத்துப் பெண்களும் மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும், 1098 என்ற எண் மகளிர் காக்கும் மந்திரமாக இருக்க வேண்டும், நன்றி முதல்வரே, விட்ராதீங்க முதல்வரே" என்று கூறியுள்ளார்.

ALSO READ கோடநாடு கொலை கொள்ளை வழக்கு டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News