மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Last Updated : Jul 1, 2019, 11:50 AM IST
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! title=

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தஅதிமுகவின் அர்ஜுணன், மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைின் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிந்ததால் அந்த இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் தூத்துக்குடி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால், திமுகவை சேர்ந்த கனிமொழி தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த 6 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

இதையடுத்து புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 8 ஆம் தேதி கடைசி நாளாகும். மனுக்களை திரும்பப் பெற 11 ஆம் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அந்த வகையில்,  திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக திமுக தரப்பில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே முன்னதாக பேசியபடி, மீதியுள்ள ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Trending News