ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள ராஞ்சி சென்ற மு.க. ஸ்டாலின்

ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டு சென்ற ஸ்டாலின்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2019, 08:37 AM IST
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள ராஞ்சி சென்ற மு.க. ஸ்டாலின் title=

புதுடெல்லி / ராஞ்சி: ஐந்து கட்டங்களாக நடந்து முடிந்த 2019 ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை பெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக ஆட்சியை இழந்தது. அதாவது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனத தளம் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று மாநிலத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார். அந்த விழா இன்று 2 மணிக்கு தொடங்க உள்ளது. அதில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டு சென்றார்.

ஹேமந்த் சோரன் பங்கேற்பு விழாவில் கலந்துக்கொள்ள பிரதமர் உட்பட அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தநிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டார். ஏற்கனவே இந்த விழாவில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ராஞ்சிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜார்க்கண்டிட் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை கடந்த 23 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற்றது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக (BJP) தனியாக போட்டியிட்டு, வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் (Congress), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (Jharkhand Mukti Morcha ) மற்றும் ராஸ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றது. மொத்தம் 81 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 41 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், ராஸ்ட்ரிய ஜனதா தளம் 1 ஒரு தொகுதி என மொத்தம் 47 இடங்கள் என பெரும்பான்மையை விட அதிக தொகுதியில் வெற்றி பெற்றது. சுயேச்சை உட்பட மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News