திமுக முன்னாள் எம்பியான வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் பிறந்தவர் வசந்தி ஸ்டான்லி. சட்டம் பயின்ற அவர், திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 2008 முதல் 2014-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், நேற்றிரவு உயிரிழந்தார். வசந்தி ஸ்டான்லியின் உடல் சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் ஸ்டான்லி வசந்தி ஸ்டான்லியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று வசந்தி ஸ்டான்லி-க்கு அஞ்சலி செலுத்தினார்.
தலைவர் கலைஞர் அவர்களால் 'கழகத்தின் கருவூலம்' என பாராட்டப்பட்ட, முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி அவர்களின் திடீர் மறைவுச்செய்தி என்னை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
கழக செயல் வீராங்கனையாக திகழ்ந்த அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/zS9GIDhgd1
— M.K.Stalin (@mkstalin) April 28, 2019