பிடிஆர் - பிரதமர் ரகசிய சந்திப்பு..! வெளியான புகைப்படம் - பின்னணி என்ன?

PTR Palanivel Thiagarajan: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரதமர் நரேந்திர மோடியை பிப்ரவரி  27 ஆம் தேதி ரகசியமாக சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 5, 2024, 12:47 PM IST
  • பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிடிஆர்
  • 15 நிமிடங்கள் வரை நீண்ட சந்திப்பு
  • சந்திப்பு குறித்து விளக்கம் கொடுத்த பிடிஆர்
பிடிஆர் - பிரதமர் ரகசிய சந்திப்பு..! வெளியான புகைப்படம் - பின்னணி என்ன? title=

பிரதமர் நரேந்திர மோடி வருகை

பிரதமர் மோடி கடந்த 27 ஆம் தேதி தமிழகம் வந்தார். அப்போது பல்லடத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் உடனடியாக மதுரை சென்ற அவர், மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அங்கு சென்ற பிரதமர் மோடியை கோவில் அறங்காவலர் குழு தலைவர் என்ற அடிப்படையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அம்மா நேரடியாக வரவேற்றார். 

பிடிஆர் - நரேந்திர மோடி சந்திப்பு

இதனையடுத்து ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோரை தனிப்பட்ட முறையில் சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் பிரதமர் மோடியை அப்போது சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்திருக்கிறது. ஆனால் இது குறித்து பிடிஆர் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பிரதமர் மோடி சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியானது. இதில் திமுக வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிருப்தி

ஏனென்றால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மைக் காலமாகவே அதிருப்தியில் இருந்து வருகிறார். மதுரை மாவட்ட திமுகவினர் சரியான ஒத்துழைப்பு இவருக்கு கொடுப்பதில்லை என்ற புகார் திமுக ஆட்சிக்கு வந்தத்தில் இருந்தே இருக்கிறது. மதுரை சம்பந்தப்பட்ட விஷயம் எதுவாக இருந்தாலும் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோரை திமுக தலைமை பிரதானப்படுத்துவதால் கட்சிக்குள் தனக்கு முக்கியத்துவமில்லை என்ற அதிருப்தி அமைச்சர் பிடிஆருக்கு இருந்தது. 

மேலும் படிக்க | மாணவிகள், ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை கைது செய்யக்கோரி போராட்டம்

அதன்தொடர்ச்சியாக நிதியமைச்சர் பொறுப்பையும் தன்னிடம் இருந்து பிடுங்கி, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கொடுத்துவிட்டு, உப்புசப்பில்லாத ஐடி துறையை கொடுத்ததும் அவருக்கு பிடிக்கவில்லை. என்னதான் ஐடி துறை இலாக்கவாக இருந்தாலும் மற்ற அமைச்சர்களின் துறைகளின் உதவுடன் மட்டுமே இந்த துறையால் எந்த மாற்றத்தையும் அரசின் நிர்வாகத்தில் கொண்டுவர முடியும். தனிப்பட்ட முறையில் பிடிஆர் அமைச்சகராக எந்தவொரு திட்டத்தையும் எந்தவொரு துறையிலும் அமல்படுத்த முடியாது. 

திமுக தலைமை மீது வருத்தம்

இப்படி திமுக தலைமை தன்னுடைய கையை கட்டிப்போட்டு, சுதந்திரமாக செயல்படவிடாததால் பிடிஆருக்கு இன்னும் அதிருப்தி அதிகரித்தது. கொள்கை அடிப்படையில் மிக தீவிரமாக செயல்பட்டாலும் சொந்த கட்சியினரே ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பது அவருக்கு ஏகப்பட்ட வருத்தமாம். திமுக தலைமையும் தன்னை இரண்டாம்பட்சமாக நடத்துவதால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் முடிவெடுத்த பிடிஆர், கொஞ்ச நாள் அமைதியாக இருக்கலாம் எனும் முடிவில் இருந்து வருகிறார். ஊழல், காசு பார்ப்பவர்களையெல்லாம் கண்டிக்காத கட்சி தலைமை, கொள்கையிலும் நிர்வாகத்திலும் சிறப்பாக செயல்படும் தன் கைகளை கட்டப்படுவதை அவர் துளியும் விரும்பவில்லை.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

இந்தசூழலில் தான் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து இப்போது விளக்கம் அளித்திருக்கிறார் அமைச்சர் பிடிஆர். முதலமைச்சர் கொடுத்த அறிவுறுத்தலின் பேரிலேயே பிரதமர் மோடியை சந்தித்ததாகவும், அரசு பணி சார்ந்து அவரிடம் பேசியதாகவும் விளக்கம் அளித்திருக்கிறார். இருப்பினும், இந்த சந்திப்பில் ஏதோ மர்ம முடிச்சு இருப்பதாகவே பலரும் சந்தேக்கிறார்கள். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News