தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் விதிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கில் சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 79 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தி.மு.க., உறுப்பினர்கள் ஸ்டாலின், தியாகராஜன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது.
அப்போது, திமுக எம்எல்ஏக்களின் இடைநீக்கம் உத்தரவுக்கு தற்போது தடை விதிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கை பற்றி விவாதிக்க வேண்டும். எனவே வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும் இதைக்குறித்து முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் பேச துணிச்சல் இல்லையா? - சட்டசபையில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா கேள்வி.
— AIADMK (@AIADMKOfficial) August 22, 2016