தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறது - லியோனி எச்சரிக்கை

DMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 14, 2024, 09:22 AM IST
  • மயிலாடுதுறையில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்
  • தேசிய கொடியின் நிறத்தை மாற்ற பாஜக சதி செய்கிறது
  • இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள்
தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறது - லியோனி எச்சரிக்கை title=

லியோனி தேர்தல் பிரச்சாரம்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மங்கநல்லூர் கடைவீதியில் அவர் பேசியபோது, மோடிக்காக ஒரு கவிஞர்‌ பாட்டு எழுதினார். இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார், இந்த நாட்டிலே... மோடி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடலை பாடினார். அதனை தொடர்ந்து மோடி போல ஹிந்தியில் நகைச்சுவையாக பேசி காண்பித்தார் லியோனி.

மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு

பாஜக செய்யும் சதி

தொடர்ந்து பேசிய அவர், தேசியக்கொடியில் மேலே இருக்கிற காவி நிறம் இந்துக்கள், நடுவில் இருக்கிற வெள்ளை நிறம் கிறிஸ்தவர்கள், அடியில் இருக்கிற பச்சை நிறம் இஸ்லாமியர்கள் என்று கூறினார். மூன்று பேரும் தர்மத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று தான் தேசியக்கொடியில் மூன்று நிறத்தையும் வைத்து இந்தியா உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த தேசியக் கொடியை முழுவதும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து கொண்டிருக்கிறது என லியோனி குற்றம்சாட்டினார்.

மோடியை வீட்டுக்கு அனுப்புங்கள்

வேற்றுமையில் ஒற்றுமை வாழ்கின்ற ஒரே நாடு இந்தியா தான் எனக்கூறிய லியோனி, அதனால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வேட்டி இந்த வேலை நரேந்திர மோடியின் டுபாக்கூர் வேலை இனிமேல் எடுபடாது என்று சொல்லி மதத்தாலும் ஜாதியாலும் நம்மளை பிரித்தாலும் பாசிச பாஜக அரசை இந்த நாட்டை விட்டு அப்புறப்படுத்தி மதச்சார்பற்ற ஒரு பிரதமரை இந்தியாவில் உருவாக்க கைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும், பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுதாவிற்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜகுமார் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

தீவிர தேர்தல் பிரச்சாரம்

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் 2024 ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.  இதனையொட்டி அதிமுக, திமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். காவல்துறை உள்ளிட்ட அரசு பணியாளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | ஜாபர் சாதிக் வைத்திருந்த தனி நெட்வார்க்... வெளியான பரபர தகவல் - அடுத்த சிக்கப்போவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News