தண்ணீருக்குள் ராஜ்ஜியம் நடத்தும் நீர் விலங்கில் முதலையை அடிச்சுக்கவே முடியாது. அது வைக்கும் குறி மிஸ்ஸே ஆகாது. வனப்பகுதிக்குள் தாகத்துக்கு தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை காத்திருந்து பொறுமையாக வேட்டையாடுவதில் கில்லாடி. மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளை எல்லாம் நொடிப்பொழுதில் வேட்டையாடி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுவிடும். புலி, சிறுத்தையைக் கூட முதலையால் வேட்டையாட முடியும். அதனால், வனப்பகுதிகளுக்குள் இருக்கும் தண்ணீருக்குள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் முதலைக்கு இரையாக வேண்டும்.
அதனால் எங்கு செல்லும்போது உள்ளூர் மக்களிடம் தண்ணீர், ஆழம் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் தண்ணீருக்குள் நீச்சலடிக்க சென்றவர் ஏதோ அதிர்ஷ்டத்தில் உயிர் பிழைத்திருக்கிற வீடியோ இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. பார்க்கும்போதே பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோவில் ஆறு ஒன்றில் நீச்சலடித்து வரும் நபரை முதலை வேகமாக வந்து வேட்டையாட முற்படுகிறது. கடிக்கவெல்லாம் செய்துவிட்டது. ஆனால் பயத்தில் இருந்த அந்த நபர் சாதூர்யமாக செயல்பட்டு முதலையை எட்டி உதைத்து அதனுடைய வேட்டையில் இருந்து தப்பிவிட்டார்.
முதலையின் வேட்டையில் இருந்து வேகவேகமாக தப்பித்தவுடன் நீந்தி கரை சேர்ந்த அந்த நபர் கையில் ரத்தம் வடிகிறது. முதலையின் பற்கள் தோள்களில் பதித்திருப்பதை நீங்கள் கவனிக்க முடியும். நீச்சல் தெரிந்த காரணத்தாலும், சாதுர்யமாக செயல்பட்டதாலும் முதலையிடம் இருந்து தப்பி பிழைத்திருக்கிறார் என்று சொல்லலாம். இந்த வீடியோ இப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் வைரலாகியுள்ளது. பலரும் இந்த வீடியோவை பார்த்து, முதலையிடம் இருந்து தப்பித்த அந்த நபருக்கு மறுபிறவி என்றும், ஆறு, ஏரி மற்றும் குளங்களில் குளிக்க செல்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் கமெண்டில் தெரிவித்துள்ளனர். தண்ணீருக்குள் செல்வதை விளையாட்டாக நினைத்தால் உயிரை விலையாக கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் சிலர் கமெண்டில் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | பறந்து வந்து அடாக் செய்த பாம்பு: பதறிய நபரின் அதிரடி ட்விஸ்ட்... வைரல் வீடியோ
இன்ஸ்டாகிராமில் வைரலான முதலை தாக்கும் வீடியோ :
மேலும் படிக்க | நடனத்தினால் கிரங்கடிக்கும் வண்ண வண்ண மயில்கள்... நெடிசன்களை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ